5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

VCK Meeting: மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கம்.. விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

அதிமுகவிற்கு விசிக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது, அதாவது கூட்டணி கட்சியில் இல்லாமல் அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதாவது வருகின்ற 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு அடி போடுவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

VCK Meeting: மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கம்.. விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 Nov 2024 10:54 AM

கள்ளக்குறிச்சியில் விசிக தரப்பில் இன்று மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக அதிமுகவிற்கு விசிக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது, அதாவது கூட்டணி கட்சியில் இல்லாமல் அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதாவது வருகின்ற 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு அடி போடுவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

மேலும் அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை திரும்பியதும் விசிக தலைவர் திருமாவளவன் அவரை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசினார். இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய நிர்வாகியான ஆனி ராஜா, சிபிஎம் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணை தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கத்திற்கான இனையத்தை ஆதவ் அர்ஜூன் தலைமையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “ ஒற்றை கோரிக்கை மதுவிலக்கு என்பதுதான். இது புதிதாக எழுப்பும் கோரிக்கை அல்ல. நாம் கண்டுபிடித்த புதிய கோரிக்கையும் இல்லை. கவுதம புத்தர் காலத்தில் இருந்தே இந்த கோரிக்கை எழுந்துள்ளது. திருமாவளவன் ஏன் திடீரென மதுவிலக்கு பற்றி பேசுகிறார். நான் சாதிப்பெருமை, மதப்பெருமை குறித்து பேசுபவன் அல்ல.

மேலும் படிக்க: தாம்பரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை.. எந்தெந்த ஏரியாவில்? லிஸ்ட் இதோ..

புத்த பெருமையை பேசுபவன். புத்தர், அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் வழி வந்ததால் ஞானம் வந்தது. செப்டம்பர் 17 ஆம் தேதி நடத்த இருந்த மாநாட்டை தள்ளி வைத்து நடத்தியுள்ளோம். எந்த மாநாட்டிலும் இல்லாத ஒரு சிறப்பு, லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாநாட்டில் புதியதாக காந்தி மற்றும் ராஜாஜியின் கட்அவுட் வைத்திருக்கிறோம். அரசியலுக்காக பயன்படுத்தவில்லை.

அரசியமைப்பு சட்டம் 47 மது ஒழிப்பு தொடர்பாக கூறுகிறது. இதனை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் பேசினேன். இந்த நாட்டை சாதி, மத வெறியர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  • அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 இல் கூறியுள்ளவாறு மது விலக்கைத் தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும்!
  • மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்!
    மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்!
  • மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்
  • தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபான கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை அரசு வெளியிட வேண்டும்
  • போதை பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்
  • மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்!
  • குடி நோயாளிகளுக்கும் போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை உருவாக்க வேண்டும்!
  • மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்!
  • டாஸ்மாக்’ என்னும் அரசு நிறுவனத்தின் மது வணிகத் தொழிலாளர்களுக்கு ‘மாற்று வேலை’ வழங்கிட வேண்டும்!
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
  • மதுவிலக்குப் பரப்பியக்கத்தில் அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்!

Latest News