5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. மறுஆய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?

Vedantas review plea dismissed:தூத்தூக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. மறுஆய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை.
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 17 Nov 2024 19:32 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அக்டோபர் 22ஆம் தேதியன்று அப்போதைய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த உத்தரவு நவம்பர் 16 சனிக்கிழமையன்று வெளியாகிவுள்ளது. முன்னதாக, ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் 2020ல் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?

தூத்தூக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், மறுஆய்வு மனுவை பட்டியலிட கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும், மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், அதில் எதுவும் இல்லை. எனவே மனுத் தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் நடைமுறைச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற விதிகளின்படி, தீர்ப்பால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், தீர்ப்பு வெளியான 30 நாட்களுக்குள் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம்.

மறுஆய்வு மனு

முன்னதாக, பிப்ரவரி 29 அன்று, அதே மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வேதாந்தாவின் மனுவை நிராகரித்தது. அப்போது, நிறுவனத்தின் பங்களிப்பின் தன்மை குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். எவ்வாறாயினும், நிலையான வளர்ச்சி மற்றும் சுகாதாரம் மற்றும் பிரதேசவாசிகளின் நலன் என்ற கொள்கையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொழில்சாலையை மூடுவது உண்மையில் முதல் தேர்வாக இருக்கவில்லை. மீறல்களின் தீவிரத்தன்மை மற்றும் பாதிப்பு ஆகியவை ஸ்டெர்லைட் ஆலையை மூட நீதிமன்றத்தை முடிவெடுக்கத் தூண்டியது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : Kasthuri: விளக்கம் கொடுத்த கஸ்தூரி.. வெளியான புதிய வீடியோ! – இணையத்தில் வைரல்!

நீதிமன்றத்தில் தொடர் முறையீடு

வேதாந்தா நிறுவனம் பலமுறை நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. தூத்தூக்குடி ஸ்டெர்லைட் ஆலை மே 2018 முதல் மூடப்பட்டு கிடக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் பாரிய அரிப்பு ஏற்பட்டுள்ளது.
1990 களில் இருந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி 2018 இல், தூத்துக்குடி மக்கள் ஆலைக்கு எதிராக 100 நாள் போராட்டத்தை நடத்தினர்.
100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வைகோ எம்.பி. வரவேற்பு

வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில், ொதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மறுமலர்ச்சி திமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவோடு நானும் இணைந்து மனு தாக்கல் செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு மீதான விசாரணை ஏற்கனவே தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி. ஒய். சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் ஜே .பி. பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நடந்தது.

ஆலையை திறக்க கோரிய ஸ்டெர்லைட் மனு மீதான விசாரணை முடிவில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நேற்று நவம்பர்-16 அன்று வெளியானது.
அதில், “ஒரு தொழில்துறையை மூடுவது ஒரு முதல் தேர்வு அல்ல. ஆனால் வேதாந்தாவின் கடுமையான மீறல்களுடன் நீண்ட மற்றும் தொடர்ச்சியான மீறல்களும் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு உயர்நீதிமன்றத்தையும் சட்டப்பூர்வ அதிகாரிகளையும் தள்ளியது.

அறையப்பட்ட கடைசி ஆணி..

இந்த ஆலை நாட்டின் தாமிர உற்பத்திக்கு பங்களித்துள்ளது. அப்பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனாலும், நிலையான வளர்ச்சி, பொது நம்பிக்கை மற்றும் மாசுபடுத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது. அவர்களின் கவலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.”

என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டது. ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது.
இது, தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் அயர்வும் சலிப்புமின்றி போராடியதற்கும் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விஜய் டிக் செய்ய உள்ள 120 பேர் யார்? த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்!

Latest News