Tirunelveli: தியேட்டராக மாறிய பள்ளி.. வேட்டையன், கோட் படம் ஒளிபரப்பால் சர்ச்சை!

தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் மாணவர்கள் செல்போன் போன்ற மின்னணு சாதங்களுக்கு அடிமையாவதால் மிகுந்த மன அழுத்தம் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகள் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களது கல்வியில் எதிரொலிப்பதால் பள்ளிகளில் விளையாட்டு, யோகா போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளை அதிகளவில் அளிக்க வேண்டும். திரைப்படங்கள் திரையிடுவது சரியாக இருக்காது

Tirunelveli: தியேட்டராக மாறிய பள்ளி.. வேட்டையன், கோட் படம் ஒளிபரப்பால் சர்ச்சை!

கோப்பு புகைப்படம்

Published: 

12 Nov 2024 20:56 PM

சினிமா படங்கள் திரையிடல்: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் மற்றும் விஜய் நடித்த கோட் படம் ஆகிய படங்கள் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்  நடித்த வேட்டையன் மற்றும் விஜய் நடித்த தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் ஆகிய படங்கள் திரையிடப்பட்டது.

ரஜினி படத்துக்கு ரூ.10 மற்றும் விஜய் படத்துக்கு ரூ.25 ஆகியவை கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படங்கள் ஒளிபரப்பான தகவலை அறிந்த இந்து முன்னணி கட்சியினர் சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது குற்றம் சாட்டி பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலகம் கவனத்திற்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பெயரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று இன்று விசாரணை நடத்தினர்.

Also ReadVande Bharat Express: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்..தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

அப்போது பள்ளி மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் படம் திரையிடப்பட்டதாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. மேலும் வேட்டையின் திரைப்படத்தில் நீட் பயிற்சி தொடர்பான கருத்துக்கள் இருப்பதால் திரையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் விசாரணை முடிவில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதாக தலைமை ஆசிரியர் அதிகாரிகளிடம் உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வேட்டையன் படமும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோட் படமும்  திரையிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதால் பள்ளியின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: TNSTC: பைக், டிவி, ஃப்ரிட்ஜ்.. அரசு பேருந்தில் பயணித்தால் பம்பர் பரிசு அறிவிப்பு!

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பொதுவாக கல்வி நிலையங்களில் தேச தலைவர்கள், தேசப்பற்று பற்றிய படங்களை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் சினிமா படங்கள் திரையிடுவது தவறான விஷயம் என இந்த சம்பவம் தொடர்பாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இப்படி படம் திரையிடப்படுகிறது என கண்டிப்பாக மாணவர்கள் பெற்றோரிடம் சொல்லி பணம் வாங்கியிருப்பார்கள். சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் இதனை தவறு என்று கண்டித்து இருக்கலாம் எனவும் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.

தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் மாணவர்கள் செல்போன் போன்ற மின்னணு சாதங்களுக்கு அடிமையாவதால் மிகுந்த மன அழுத்தம் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகள் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களது கல்வியில் எதிரொலிப்பதால் பள்ளிகளில் விளையாட்டு, யோகா போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளை அதிகளவில் அளிக்க வேண்டும். திரைப்படங்கள் திரையிடுவது சரியாக இருக்காது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்