திமுகவுக்கு நெருக்கடி தருகிறதா விசிக? வெளிப்படையாக பேசிய திருமாவளவன்!

திமுக கூட்டணியில் தான் இருப்போது விசிக இருக்கிறது என்றும் கூட்டணி தொடரும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ”திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கிறது. திமுக கூட்டணியில் தான் விசிக தொடரும். தேர்தல் கூட்டணிக்காக மாநாட்டை நடத்தினால் அதைவிட அசிங்கம் தனக்கு கிடையாது" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

திமுகவுக்கு நெருக்கடி தருகிறதா விசிக? வெளிப்படையாக பேசிய திருமாவளவன்!

திருமாவளவன்

Updated On: 

11 Nov 2024 10:54 AM

திமுக கூட்டணியில் தான் இருப்போது விசிக இருக்கிறது என்றும் கூட்டணி தொடரும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசியலை பொறுத்தவரை தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தின் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடத்தப்பட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மாநாட்டில் பங்கேற்க வருமாறு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலக தயாரானதாகவும், வரும் தேர்தலில் கூட்டணி தொடராது என்று பேச்சுக்கள் அடிப்பட்டது. அதேவேளையில் பாஜக மற்றும் பாமகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இருப்பினும், திமுக கூட்டணியில் விகிக இருக்காது என்று அரசியல் களத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து திருமாவளவன் விளக்கம் அளிதுதள்ளார்.

Also Read: பயணிகளே உஷார்.. சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் மக்களே!

திமுகவுக்கு நெருக்கடி தருகிறதா விசிக?

இதுகுறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கு மது விலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கிறது- மது ஒழிப்பு கொள்கையில் உடன்பாடு உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். யாருக்கு நாங்கள் அதிகாரப்பூர்வமாக அழைப்பு கொடுக்கவில்லை. இன்னும் 15 நாட்கள் இருக்கிறது யார் யாரை அழைப்பது என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இது மகளிர் அணி மாநாடு என்பதால் தேசிய அளவில் மகளிர் அணி தலைவர்களை அழைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். சாதிய, மதவாத சக்திகளை தவிர்த்து மற்ற ஜனநாயக சக்திகள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விசிக எப்போதுமே பேசவில்லை. திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கிறது. திமுக கூட்டணியில் தான் விசிக தொடரும்.

மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் தொடர்புபடுத்தக்கூடாது. தேர்தல் கூட்டணிக்காக மாநாட்டை நடத்தினால் அதைவிட அசிங்கம் தனக்கு கிடையாது” என்றார். இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், “மது ஒழிக்கப்பட வேண்டும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அசைக்க முடியாத கொள்கையாகும். அதிமுகவின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதே கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள். எடப்பாடி பழனிச்சாமி காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் ஆண்டுதோறும் மூடப்பட்டு வந்தது.

தற்போது இந்த நிலைப்பாட்டை விசிக தலைவர் திருமாவளவன் எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்வது குறித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இறுதி முடிவு எடுத்து விரைவில் தெரிவிப்பார்” என வைகை செல்வன் கூறியிருந்தார். இப்படியான சூழலில் இன்று காலை திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைளதத்தில் வைரலானதோடு பல கேள்விகளை தூண்டியது. அதாவது, ஆட்சியிலும் அதிகாரித்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய வீடியோவை அவரது எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிவிடப்பட்டு நீக்கப்பட்டிருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.

Also Read : மண்டையை பொளக்கும் வெயில்.. 2 நாட்களுக்கு அதிகரித்து காணப்படும் வெப்பநிலை..

போட்டு உடைத்த திருமாவளவன்:

நீக்கப்பட்ட சிலி நிமிடங்களிலேயே ‘ஆட்சியில் பங்கு’ என்ற கேப்ஷனுடன்’ அதே வீடியோவை பதிவிட்டார். அதனையும் உடனடியாக நீக்கிவிட்டால். மீண்டும் மீண்டும் பதிவிட்டு நீக்குவதற்கு காரணம் என்ன? இதன் மூலம் யாருக்கு என்ன சொல் வருகிறார் என தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நீண்ட காலமாக நாங்கள் விடுக்கும் கோரிக்கை. வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது. அட்மின் பதிவிட்டிருக்கலாம்” என்று கூறினார்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷச்சாரய உயிரிழப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள் காரணமாக விசிக அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ விவாகாரம் திமுக – விசிக கூட்டணி உறவு எப்படி உள்ளது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. மேலும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. அதேவேளையில் அதிமுக அல்லது விஜய்யின் த.வெ.க கட்சியில் கூட்டணியில் சேர போகிறார் என்ற கேள்வியை கிளப்பி இருக்கிறது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!