G.O.A.T படத்திற்கும் சனாதனத்திற்கும் தொடர்பா? கிளப்பி விட்ட விசிக எம்.பி!
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் (Greatest of All Time) இன்று வெளியானது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி. ரவிக்குமார் கேட் பட தலைப்பு குறித்து புதிய தகவலை கிளப்பி இருக்கிறார்.
GOAT படத்திற்கும் சனாதனத்திற்கும் தொடர்பா? இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் (Greatest of All Time) இன்று வெளியானது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி. ரவிக்குமார் புதிய புயலை கிளப்பி இருக்கிறார். அதாவது, நடிகர் விஜய்யின் கோட் பட தலைப்பு குறித்து கூறியிருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம். ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?
The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!
‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய்… pic.twitter.com/hJceOJVjYM
— Dr D.Ravikumar (@WriterRavikumar) September 5, 2024
Also Read : ”விவாகரத்து பெறும் வரை ஜீவனாம்சம் தந்து தான் ஆகணும்” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “தி கோட்”. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு வெளியான முதல் படம் கோட்.
Also Read: டைட்டில் முதல் கிளைமேக்ஸ் வரை ட்விஸ்ட்.. கோட் பட விமர்சனம் இதோ!
விஜய் அரசியில் கட்சி தொடங்கியதில் இருந்த பல விமர்சனங்களையும், விவாதங்களையும் வருகிறது. அண்மையில் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியையும், பாடலை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று கோட் பட வெளியாகி இருக்கும் சூழலில், படத்தில் தலைப்பு குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கும நிலையில், தனது கட்சியின் கொள்கைகள் குறித்து அதில் விஜய் விளக்கி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.