5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: பூமி பூஜை நடத்தும் விஜய்.. மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கி உள்ளார்.

TVK Vijay: பூமி பூஜை நடத்தும் விஜய்.. மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!
த.வெ.க தலைவர் விஜய்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 28 Sep 2024 16:00 PM

விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க உள்ளது.

மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க

மாநாட்டிற்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாநாடு நடத்துவதற்கான பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சுமார் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் வரை இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தவெக கட்சியினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

Also Read: இளைஞர்களே ரெடியா.. 5 ஆயிரம் பேருக்கு வேலை… தமிழக அரசின் புதிய துவக்கம்!

மாநாடு நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறையும் அனுமதி அளித்துள்ளது. அதோடு, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 33 நிபந்தனைகளில் அதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த வாரம் பூமி பூஜை நடத்தும் விஜய்:

மாநாடு நடைபெறும் நாளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, பார்க்கிங் வசதி, பாதுகாப்பு, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

மாநாட்டிற்கு அனுமதி அளித்திருப்பதை விஜய் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதாக தொடர்பாக த.வெ.க கட்சியினர் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், கட்சி நிர்வாகிகளும் அந்தெந்த தொகுதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொண்டர்களுக்கு உத்தரவு:

இந்த நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. அப்போது நிர்வாகிகள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

அதன்படி, விக்கிரைவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், மாநாட்டிற்கு வரும் தொண்டர்களும் மக்களும் சட்டத்திற்கு உட்பட்டு கட்சிக்கும் விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாமல் ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.

Also Read: திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது.

அண்மையில் கூட அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து, பெரியார் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியது திராவிட சித்தாந்தத்தை கையில் எடுப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இதன் மூலம், விஜய் என்ன மாதிரியான அரசியலை நோக்கி பயணிக்கப்போகிறார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். அடுத்த கட்டமாக  அக்டோபர் மாதம் விஜய் நடத்தும் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Latest News