5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vijayakanth Birthday: மறைவுக்குபின் முதல் பிறந்தநாள்..! விஜயகாந்தின் கல்வி முதல் மறைவு வரை.. முழு விவரம் இங்கே!

Vijayakanth: திரையுலகில் முன் அனுபவம் இல்லாத விஜயகாந்த், நடிகராக வேண்டும் என்ற ஆசையுடனும், கனவுடனும் மதுரையை விட்டு வெளியேறி சென்னைக்கு இடம் பெயர்ந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த விஜயகாந்த், எம்.ஜி.ஆருக்கு சிலை நிறுவி சமூக சேவைகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக குரல் கொடுத்தார். 1980 முதல் 1990 ஆண்டு காலக்கட்டத்தில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக தனது படங்களில் புரட்சி பேசினார்.

Vijayakanth Birthday: மறைவுக்குபின் முதல் பிறந்தநாள்..! விஜயகாந்தின் கல்வி முதல் மறைவு வரை.. முழு விவரம் இங்கே!
கேப்டன் விஜயகாந்த்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 25 Aug 2024 11:53 AM

விஜயகாந்த் பிறந்தநாள்: கேப்டன் என்று தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, முதல் பிறந்தநாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கோயம்பேட்டின் அமைந்திருக்கும் விஜயகாந்தின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருகை புரிந்து வருகின்றனர். நடிகராக உலகிற்கு அறிமுகமாகி, பின் அரசியல்வாதியாக உருமாறி தனக்கென ஒரு அடையாளத்தை அமைத்து மக்களின் மனதை வென்றார். கேப்டன் விஜயகாந்தின் மறைவின்போது தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜயகாந்தின் வரலாறை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: IPL 2025: பயிற்சியாளராக யுவராஜ் சிங்! ஒப்பந்தம் போட்ட டெல்லி..? வெளியான தகவல்!

விஜயகாந்தின் கல்வி விவரம்:

கடந்த 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி விஜயகாந்த், விஜயராஜ் அழகர்சாமியாக மதுரையில் பிறந்தார். சிறுவயது முதலே விஜயகாந்த் பள்ளிப் படிப்பை விட திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டினார். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை வீடுக்கு அருகிலுள்ள தொடக்க பள்ளியில் படித்த விஜயகாந்த், எம்சி உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பை முடித்தார்.

தொடர்ந்து தேவகோட்டை பள்ளியில் விஜயகாந்த் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பை முடித்த விஜயகாந்த், ஒன்பதாம் வகுப்பை வேறு பள்ளியில் முடித்தார். அதன்பின், செயிண்ட் மேரிஸ் பள்ளியில் பத்தாவது மற்றும் பதினொன்றாவது படிப்பை முடித்தார். பள்ளிக்கு செல்ல ஆர்வம் இல்லாத விஜயகாந்த் தனது தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் பணிபுரிந்து தனது நிர்வாக திறமையால் அவரை வியப்பில் ஆழ்த்தினார். இதனால், பதினொன்றாம் வகுப்பிற்கு மேல் கல்வியை தொடர முடியவில்லை.

சினிமா மீது ஆர்வம்:

திரையுலகில் முன் அனுபவம் இல்லாத விஜயகாந்த், நடிகராக வேண்டும் என்ற ஆசையுடனும், கனவுடனும் மதுரையை விட்டு வெளியேறி சென்னைக்கு இடம் பெயர்ந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த விஜயகாந்த், எம்.ஜி.ஆருக்கு சிலை நிறுவி சமூக சேவைகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக குரல் கொடுத்தார். 1980 முதல் 1990 ஆண்டு காலக்கட்டத்தில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக தனது படங்களில் புரட்சி பேசினார். இதன் காரணமாகவே, புரட்சிக் கலைஞர் என்ற புனைப்பெயரை பெற்று, 150க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார். இவை அனைத்தும் பிற மொழி அல்லாத தமிழ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பயணம்:

2005ம் ஆண்டு சினிமாவில் இருந்து அரசியலுக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை நிறுவினார். தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்திய திராவிட கட்சிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த கட்சி தொடங்கப்பட்டது. 2006 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், தேமுதிக வலுவாக அறிமுகமாகி தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றது.

ALSO READ: Health Tips: ஓடிய பிறகு இந்த தவறுகளை செய்யாதீங்க.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!

தொடர்ந்து 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தேமுதிக எதிர்க்கட்சியாகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தும் கிடைத்தது. அரசியல் கட்சியை தவிர்த்து, விஜயகாந்த் கல்வி அறக்கட்டளை மற்றும் விஜயகாந்த் அறக்கட்டளையை நிறுவினார், அதன் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலனில் பங்களித்தார்.

அதன்பின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை மோசமான நிலையில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார்.

மறைவுக்குபின் முதல் பிறந்தநாள்:

2023ல் விஜயகாந்த் மறைவுக்குபின் முதல் பிறந்தநாள் இதுவாகும். இதையடுத்து, சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்த திரண்டு வருகின்றனர்.

Latest News