5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெறப்பட்ட 64 வேட்புமனுக்களில் 29 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை. இதானால், விக்கரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக உட்பட 64 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Jun 2024 17:04 PM

வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெறப்பட்ட 64 வேட்புமனுக்களில் 29 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை. இதானால், விக்கரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக உட்பட 64 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 35 மனுக்கள் நிராக்கரிக்கப்பட்ட நிலையில், 29 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாக இன்று இருக்கும் நிலையில், யாரும் வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை. மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், விக்கரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் நட்சத்திர வேட்பாளராக உள்ளனர். திமுகவுக்கு உதயசூரியன், பாமகவுக்கு மாம்பழம், நாதகவுக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாடு சட்டப்பேரவை.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், யாரும் வாபஸ் பெறாததால் 29 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதால், திமுக, பாமக, நாதக என மும்முனைப்போட்டி நிலவுகிறது.

Also Read: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் எப்படி ?

Latest News