Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மிக அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். பாமக 2ஆம் இடத்தையும், சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். திமுகவின் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி!

அன்னியூர் சிவா

Updated On: 

13 Jul 2024 16:11 PM

திமுக அபார வெற்றி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மிக அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். பாமக 2ஆம் இடத்தையும், சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் நின்றார்கள். இருந்தாலும், திமுக, பாமக, நாதக ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவியது. கடந்த 10 ஆம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 82.74 சத்வீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே திமுகவின் அன்னியூர் சிவா முன்னிலை விகித்து வந்தார். 20வது சுற்றி வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். பாமக சார்பில் போட்டியிட்ட சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயா 10,602 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்ற நிலையில், இதனை கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: மருத்துவமனையில் சிகிச்சை… அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை எப்படி இருக்கு?

முதலமைச்சர் ஸ்டாலின்: 

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக.

இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.

திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் – வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம். மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: 15 ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நீடிக்குமா மழை?

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்