Vikravandi By Election: வாக்குச்சாவடியில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து… விக்கிரவாண்டியில் பரபரப்பு! - Tamil News | | TV9 Tamil

Vikravandi By Election: வாக்குச்சாவடியில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து… விக்கிரவாண்டியில் பரபரப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண் மீது கத்திக்குத்து நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்திருந்த நிலையில், அவருடைய முன்னாள் கணவர் ஏழுமலை என்பவர் திடீரென கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார்.

Vikravandi By Election: வாக்குச்சாவடியில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து... விக்கிரவாண்டியில் பரபரப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

Updated On: 

10 Jul 2024 14:36 PM

பெண்ணுக்கு கத்திக்குத்து: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டி-கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக பெண் ஒருவர் வரிசையில் காத்திருந்தார். அப்போது, அந்த பெண் மீது ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் கனிமொழி (49) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்திருந்த நிலையில், அவருடைய முன்னாள் கணவர் ஏழுமலை என்பவர் திடீரென கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். உடனடியாக அலறல் சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கனிமொரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ஏழுமலையை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

52 வயதான ஏழுமலை இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்ற வந்த நிலையில், மனைவி கனிமொழியை பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது. மனைவி கனிமொழி வேறொரு ஊரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தான் வாக்களிப்பதற்காக வந்த கனிமொழி கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இரவு நேரத்தில் வீடுகள் மீது கல்வீச்சு.. பேய் பயத்தால் அலறும் மக்கள்.. திருப்பூரில் பரபரப்பு..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் காரணத்தினால் விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit), 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 44 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 276 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும் நுண்பார்வையாளர்களாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

களம் யாருக்கு சாதகம்?

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமக வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக உள்ள சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா, 18 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Also Read: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. சென்னையில் எப்படி? வானிலை மையம் அலர்ட்!

 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!