Vikravandi Byelection 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. களம் யாருக்கு சாதகம்? விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.. - Tamil News | | TV9 Tamil

Vikravandi Byelection 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. களம் யாருக்கு சாதகம்? விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு..

Vikravandi Bypoll: கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

Vikravandi Byelection 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. களம் யாருக்கு சாதகம்? விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

Published: 

10 Jul 2024 09:12 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் காரணத்தினால் விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.விக்கிரவாண்டி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன் தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதனை தொடர்ந்து நேற்று இறுதி கட்ட பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. குறிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Also Read:  இன்று சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமக வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக உள்ள சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா, 18 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit), 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 44 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 276 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும் நுண்பார்வையாளர்களாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம்… ஜெய்ஷா அறிவிப்பு

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!