Fluorescent Waves: ECR கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்.. என்ன காரணம் தெரியுமா?
இந்தியாவைப் பொறுத்தவை அந்தமானில் உள்ள ஹேவ்லாக் கடற்கரை, தமிழ்நாட்டின் திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை, லட்சத்தீவில் உள்ள பங்காரம் கடற்கரை மற்றும் கர்நாடகாவின் மட்டூ - படுகெரே கடற்கரை பகுதிகளில் ஒளிரும் அலைகளை காணலாம். சில நேரங்களில் இந்த இடங்களின் மற்ற பகுதிகளிலும் தெரியும். குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் இந்த ஒளிரும் அலைகளை பார்க்க சிறந்த காலமாக கருதப்படுகிறது.
ஒளிரும் அலைகள்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென தோன்றிய நீல நிற ஒளிரும் அலைகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், “ஈசிஆர் கடற்கரையில் வசீகரிக்கும் ஃப்ளோரசன்ட் அலைகளை இப்போது பார்த்து ரசித்தேன்” என தெரிவித்துள்ளார். கிழக்கு கடற்கரை முழுவதும் நேற்று மாலை முதல் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்துள்ளது. இதற்கான காரணம் தெரியாதபோதும், பொதுமக்கள் இதனை கண்டு ரசித்தனர். அதேபோல் விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையிலும் ஒளிரும் அலைகளை அப்பகுதி மக்கள் வந்து பார்த்த வண்ணம் இருந்தனர்.
Just now enjoyed the mesmerising Fluorescent waves at ECR beach!! #Bioluminescence pic.twitter.com/6ljfmlpyRO
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 18, 2024
நீல நிறத்தில் தெரிய காரணம்
இந்தியா மட்டுமல்லாது உலகின் பல கடற்கரைகளிலும் இரவு நேரத்தில் ஒளிரும் அலைகள் தோன்றுவது வழக்கமான நிகழ்வும் தான். சென்னையில் உள்ள திருவான்மியூர் கடற்கரையில் இதுபோன்ற அலைகளை நாம் காணலாம். கடல் அலைகள் இப்படி ஒளிரக்காரணம் அதில் வாழும் உயிரினத்தின் உள்ளே அல்லது வெளியே நிகழும் இரசாயன எதிர்வினைகளின் விளைவாகும் என சொல்லப்படுகிறது. கடல் வாழ் உயிரினம் இல்லாவிட்டாலும் உதாரணமாக நாம் மின்மினி பூச்சியை சொல்லலாம். அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஒளி அந்த இடத்தில் பிரகாசமாக தெரிகிறதோ அப்படித்தான் இந்த அலைகள் தோன்றுகிறது. இந்த ரசாயன மாற்றமானது வேட்டையாடுபவர்களை எச்சரித்தல் அல்லது தவிர்ப்பது, இரையை ஈர்ப்பது அல்லது கண்டறிதல் மற்றும் ஒரே இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடையே தொடர்பு வைத்துக் கொள்ள போன்ற பல நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயன மாற்றம் கடல் மேற்பரப்பில் இருந்து ஆழமான கடற்பரப்பு வரை நிகழ்கிறது எனவும் கூறப்படுகிறது.
Also Read: School Leave: கனமழை எதிரொலி.. புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
இந்த ரசாயன மாற்றம் நிகழும் போது அந்த கடல் தண்ணீரை நாம் தொட வேண்டாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவை அந்தமானில் உள்ள ஹேவ்லாக் கடற்கரை, தமிழ்நாட்டின் திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை, லட்சத்தீவில் உள்ள பங்காரம் கடற்கரை மற்றும் கர்நாடகாவின் மட்டூ – படுகெரே கடற்கரை பகுதிகளில் ஒளிரும் அலைகளை காணலாம். சில நேரங்களில் இந்த இடங்களின் மற்ற பகுதிகளிலும் தெரியும். குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் இந்த ஒளிரும் அலைகளை பார்க்க சிறந்த காலமாக கருதப்படுகிறது. ஆனால் அக்டோபர் மாதம் இந்நிகழ்வு நடந்துள்ளதால் அதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read: Diwali: தீபாவளி கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா? – ஆன்மிகம் சொல்லும் நிகழ்வு இதுதான்!
அமெரிக்காவைப் பொறுத்தவரை தெற்கு கலிபோர்னியாவில் லாகுனா கடற்கரை, ஹண்டிங்டன் கடற்கரை, நியூபோர்ட் கடற்கரை, என்சினிடாஸ், கார்டிஃப் ஸ்டேட் கடற்கரை, மரின் கவுண்டியில் உள்ள டோமல்ஸ் பே மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சாண்டா மோனிகா பே மற்றும் பாயிண்ட் ரெய்ஸ் போன்ற இடங்களில் ஒளிரும் அலைகளை காணலாம்.
கவனம் தேவை
கடற்கரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. கடல் அலைகளும், அது கரையில் வந்து மோதும் அழகும் பெரியவர்களையும் சிறியவர்களாக மாற்றி குதூகலிக்க வைக்கும். இன்றைக்கு கடலில் அவ்வப்போது பல நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். புயல், காற்றழுத்த தாழ்வு நிலை, கள்ளக் கடல் நிகழ்ச்சி காரணமாக கடல் சீற்றம், உள்வாங்குவது உள்ளிட்ட பல நிகழ்வுகள் கடலில் நிகழ்கிறது. எனவே கடல் அலையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால் அதனை அனுபவிக்க என்ன கூடாது. மாறாக அதிலிருந்து விலகி இருந்து என்ன காரணம் என்று தெரிந்து கொண்டு பின்னர் கடலில் இறங்குவதையோ, விளையாடுவதோ தொடரலாம். காரணம் பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து வரும் கடலில் நடைபெறும் மாற்றங்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.