5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
விபத்து (கோப்புப்படம்)
umabarkavi-k
Umabarkavi K | Published: 29 Jun 2024 16:47 PM

பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஆலையில் பணியில் இருந்த 4 ஆண் தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இதனை அறிந்த தீயணைப்பு துறையனர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா.. சட்டபேரவையில் தாக்கல்..!

நிவாரணம் அறிவிப்பு:

இதனை அடுத்து, சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று (29-06-2024) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜ்குமார் (வயது 45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த திரு. மாரிச்சாமி (வயது 40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த திரு. செல்வகுமார் (வயது 35) மற்றும் திரு. மோகன் (வயது 30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் 9ஆம் தேதி சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இன்றும் நாளையும் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை சொல்லும் தகவல் என்ன?

Latest News