5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கேரள சினிமாவை போல தமிழ் சினிமாவில் எந்த பாலியல் புகாரும் வரவில்லை.. அமைச்சர் சாமிநாதன் திட்டவட்டம்!

Sexual Allegation | மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண்  கலைஞர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகையான சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

கேரள சினிமாவை போல தமிழ் சினிமாவில் எந்த பாலியல் புகாரும் வரவில்லை.. அமைச்சர் சாமிநாதன் திட்டவட்டம்!
அமைச்சர் சாமிநாதன்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 29 Aug 2024 18:08 PM

அமைச்சர் சாமிநாதன் பேட்டி : மலையாள சினிமாவில் ஹேமா அறிக்கைக்கு பிறகு பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற பாலியல் சீண்டல்கள் குறித்து மனம் திறந்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் சினிமாவில் அத்தகைய புகார்கள் எதுவும் வரவில்லை என்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், மலையாள சினிமா துறையில் நடந்தது போல, தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார். அவ்வாறு புகார்கள் வந்தால் சட்டப்படி உடனடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : National Best Teacher Award 2024 : தேசிய நல்லாசிரியர் விருது.. குக்கிராமத்தில் இருந்து தேர்வான கோபிநாத்.. அப்படி என்ன செய்தார்?

மலையாள சினிமாவில் அடுத்தடுத்து வெளியான பாலியல் புகார்கள்

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண்  கலைஞர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகையான சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த கமிட்டி சுமார் 60-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டது. அதன்படி கடந்த 2019 ஆம் அண்டு ஹேமா கமிஷன் அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் வரை வெளியிடப்படாமலே இருந்தது. இந்நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால், இந்த அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 ஆம் தேதி வரை பொளக்கப்போகும் மழை..

கூண்டோடு ராஜினாமா செய்த மலையாள நடிகர் சங்கம்

ஆனால் அந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கூறப்பட்டவர்களின் பெயர்கள் உள்பட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த அறிக்கை வெளியானதற்கு பிறகு, மலையாள திரையுலகை சேர்ந்த பல நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மனம் திறந்து வருகின்றனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் உட்பட அனைவரும் பதவி விலகினர். இது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரள சினிமாவை போல தமிழ் சினிமாவில் எந்த வித பாலியல் புகார்களும் வரவில்லை என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News