Thirumavalavan : கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை கருத்து.. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருமாவளவன் சொன்ன பதில்! - Tamil News | We will discuss and take mandatory action says VCK leader Thirumavalavan on Aadhav Arjuna Issue | TV9 Tamil

Thirumavalavan : கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை கருத்து.. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருமாவளவன் சொன்ன பதில்!

Published: 

25 Sep 2024 19:41 PM

Aadhav Arjuna | சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆக்கும்போது, திருமாவளவன் ஏன் ஆக முடியாது". "வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது" என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.

Thirumavalavan : கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை கருத்து.. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருமாவளவன் சொன்ன பதில்!

திருமாவளவன்

Follow Us On

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜினா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அதுமட்டுமன்றி கூட்டணி கட்சிகள் குறித்தும் அவர் அவதூறு கருத்துகளை கூறி வருகிறார். அந்த வகையில் துணை முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது குறித்து அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் விசிக, திமுக இடையே மோதல் போக்கு நிலவியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் விசிக-திமுக இடையே எந்தவித விரிசலும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முன்னணி தலைவர்களோடு கலந்துபேசி முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Evening Digest 25 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனா

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆக்கும்போது, திருமாவளவன் ஏன் ஆக முடியாது”. “வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது” என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார். அவர் பேசிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Harsha Sai : பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் புகார்.. இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ஆ.ராசா பதில்

ஆதவ் அர்ஜுனாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா அதற்கு எதிவினை ஆற்றியிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை கல்லூரி காலம் முதலே நன்கு அறிவேன். கடந்த 40 ஆண்டுகளாக நல்ல பழக்கம் இருக்கிறது. மாணவர் பருவத்திலேயே இருவரும் ஒன்றாக மேடை ஏறி பல்வேறு சமயங்களில் பேசி இருக்கிறோம். அவரது இடது சாரி சிந்தனை இன்றைக்கு இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது என்பதை நானும் தமிழகம் முதல்வரும் மு.க. ஸ்டாலினும் பெருமிதம் கொள்கிறோம்.

இதையும் படிங்க : Tirupati Laddu : ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு புகார்.. நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்ததாக புகார்!

வீசிகவில் புதிதாக சேர்ந்திருக்கிற ஒருவர் கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பதாக நான் பார்க்கிறேன். இது கூட்டணி அறத்திற்கு, அரசியல் அரணுக்கு ஏற்புடையது அல்ல. இடதுசாரி சிந்தனை மட்டுமின்றி தமிழ் மொழி, தமிழ் இனம் என்கின்ற வரலாற்று பின்னணி உடன் கூடிய அரசியல் புரிதல் உள்ள் திருமாவளவன் இந்த கருத்தை ஏற்கமாட்டார். அவரது ஒப்புதலோடு பேசியிருக்க மாட்டார் என்பது என்னுடைய எண்ணம். அவர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்திருக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுப்பார் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..

விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ஒவ்வொரு தனிநபருக்கும் கருத்து சொல்ல சுதந்திரமும், உரிமையும் உண்டு. இறுதியில் தலைமை எடுக்க முடிவுக்கு கட்சி கட்டுப்படும். ஆதவ் அர்ஜுனாவும் அதையே செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அப்போது ஆதவ் அர்ஜுனா மீது ஏதேனும் நடவடிக்கை என்று செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சி கூட்டணிக்கு எந்த சேதமும் ஏற்படாமல் முடிவெடுக்கும் பொறுப்பு தலைமை என்ற முறையில் எனக்கு உள்ளது. முன்னணி தலைவர்களோடு கலந்து பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
Exit mobile version