மார்பு பகுதியில் முருகன் டாட்டூ.. பெண்ணுக்கு எழுந்த கண்டனங்களும்.. ஆதரவுகளும்!
Murugan Tattoo: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் கடவுள் முருகன் என சொல்லப்படும் அளவுக்கு அவர் ஒவ்வொரு வீட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அதனால் முருகன் மீதான பக்தி என்பது அதிகமாகவே அனைவருக்கும் உள்ளது. விசேஷ நாட்களில் முருகன் கோயில்களுக்கு சென்று விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் முருகன் மீதான பக்தியால் உடலில் முருகனின் புகைப்படம், வேல் உருவம் உள்ளிட்டவற்றை டாட்டூவாக குத்திக் கொள்கின்றனர்.
முருகன் டாட்டூ: பெண் ஒருவர் மார்பு பகுதியில் முருகன் படத்தை டாட்டூவாக குத்திக்கொண்ட சம்பவம் தான் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பச்சை குத்துதல் என்பது தமிழர்களின் மரபுகளில் கலந்த விஷயம் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சமீபகாலமாக உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் இவை தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் குத்தப்பட்டு வருகிறது. அப்படியான நிலையில் பலரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், அவர்களின் புகைப்படம், தங்களுக்கு பிடித்த நடிகர்களின் புகைப்படம் என விதவிதமாக டாட்டூ குத்துகிறார்கள். இன்னும் சில உடல் முழுக்கவும், உடலின் குறிப்பிட்ட பகுதியிலும் பச்சைக்குத்தி கொள்கின்றனர். இப்படியான நிலையில் இந்த மாதிரியாக டாட்டூ குத்திக்கொள்ளும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளையும் பெறுகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடவுள் முருகன் புகைப்படத்தை தனது வலது பக்க மார்பின் மேல்பகுதியில் டாட்டூ போட்டுக்கொண்டதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் வலம் வந்து கடும் சர்ச்சையாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் கடவுள் முருகன் என சொல்லப்படும் அளவுக்கு அவர் ஒவ்வொரு வீட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அதனால் முருகன் மீதான பக்தி என்பது அதிகமாகவே அனைவருக்கும் உள்ளது. விசேஷ நாட்களில் முருகன் கோயில்களுக்கு சென்று விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
இப்படியிருக்கும் நிலையில் முருகன் மீதான பக்தியால் உடலில் முருகனின் புகைப்படம், வேல் உருவம் உள்ளிட்டவற்றை டாட்டூவாக கைகள், மார்பு பகுதியில் பக்தர்கள் பலரும் குத்திக் கொள்கின்றனர். அப்படியான நிலையில் பெண் ஒருவர் குத்திக்கொண்டது ஆதரவு கருத்துகளையும், எதிர்ப்பு கருத்துகளையும் பெற்றுள்ளது.
இணையவாசி ஒருவர், “ இங்கு ஆண் மார்பில் முருகன் படத்தை டாட்டூவாக போட்டுக்கொண்டால் பிரச்னை இல்லை. அதுவே ஒரு பெண் குத்தினால் பிரச்னையா. ஆணாதிக்க சமூகம் தான் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறது” என ஆதரவாக கூறியுள்ளார். இன்னொருவர், “கடவுளின் படைப்பாக கருதப்படும் நம் உடலில் அவரின் உருவத்தை டாட்டூ குத்துவதில் தப்பு எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார். மற்றொருவர், “ஒரு பெண் மார்பில் முருகன் படத்தை வரைந்தால் கலாச்சார சீரழிவு என கத்துவோம். ஆனால் ஆண் வரைந்தால் ஒருவரும் கேள்வி கேட்பதில்லை. சூப்பர் என சொல்வது என்ன விந்தையோ” என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேசமயம், “மார்பகம் என்பது அந்தரங்கமான இடம் என குறிப்பிடப்படும் நிலையில் அதில் இறைவனை இடம்பெற செய்து களங்கம் ஏற்படுத்திய அப்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சிலர் தெரிவித்துள்ளனர். மேலும், ‘ஆணோ, பெண்ணோ எல்லாருக்கும் கடவுள் ஒன்று தான். அவருக்கான மரியாதையை சரியாக கொடுக்க வேண்டும். கண்ட இடங்களில் இப்படி டாட்டூ குத்துவது தவறான செயல்’ எனவும் கண்டித்துள்ளனர்.