5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: தலை துண்டான கொடூரம்.. ஆவின் தொழிற்சாலையில் விபத்தில் சிக்கிய இளம்பெண்.. பதைபதைக்கும் சம்பவம்!

திருவள்ளூரில் ஆவில் தொழிற்சாலையில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால் இளம் பெண் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

Crime: தலை துண்டான கொடூரம்.. ஆவின் தொழிற்சாலையில் விபத்தில் சிக்கிய இளம்பெண்.. பதைபதைக்கும் சம்பவம்!
உயிரிழந்த பெண்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 Aug 2024 13:35 PM

ஆவின் பண்ணையில் விபத்தில் சிக்கிய பெண்: திருவள்ளூரில் ஆவில் தொழிற்சாலையில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால் இளம் பெண் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் தினமும் 90 ஆயிரம் லிட்டர் பால் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் செங்கல்பட்டு , மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் காக்களூர் பால் பண்ணையில் நேற்று சோக நிகழ்வு நடந்துள்ளது. அதாவது,  ஆவில் தொழிற்சாலையில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால் இளம் பெண் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Also Read: வேகமாக வந்த வந்தே பாரத் ரயில்.. செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பறிபோன உயிர்.. கோவையில் அதிர்ச்சி!

நேற்று  வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பால் உற்பத்தியாகி வெளியே வரும்போது அதனை பிளாஸ்டிக் டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் அங்கிருந்து பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது,  அங்கிருந்த ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.  அதாவது, பிளாஸ்டிக் டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி (30) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது துப்பட்டா மற்றும் முடி இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது.

தலை துண்டான கொடூரம்:

இதனால் உமா ராணி தலை  துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி கந்தன் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விபத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி உமா ராணி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாதமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கரண்ட் பில் கட்ட போறீங்களா? இனி ரொக்கமாக செலுத்த முடியாது.. மின்வாரியம் அதிரடி!

இதனால் காக்களூர் பால் பண்ணையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது. இதனால் ஆவின் பால் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எதிர்பாராத விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Latest News