உலக தாய்ப்பால் வாரம்: தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் உயர்ந்துள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தைகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் வல்லமை கொண்டது தாய்ப்பால். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வரம் அனுசரிக்கபப்டுகிறது. அந்த வகையில் இன்று பொது சுகாதார துறை அலுவலகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக தாய்ப்பால் வாரம் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, உறுதி மொழியினை ஏற்றார்.
உலக தாய்ப்பால் வாரம்: தாயின் கருவில் இருந்து வெளிவந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவு தாய்ப்பால் தான். குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தாய்ப்பால் வழங்குகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தைகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் வல்லமை கொண்டது தாய்ப்பால். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வரம் அனுசரிக்கபப்டுகிறது. அந்த வகையில் இன்று பொது சுகாதார துறை அலுவலகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக தாய்ப்பால் வாரம் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, உறுதி மொழியினை ஏற்றார்.
அதன் பின்பு பேசிய அவர், “ 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் திங்கள் 1ந் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இந்த உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலக தாய்ப்பால் வாரத்தை பொறுத்தவரை இன்றைக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தாய்மார்களை உணர வைப்பதற்கும் அதற்கான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்வு பெரிய அளவில் உறுதுணையாக இருக்கிறது. கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தாய்ப்பால் ஊட்டுதலை மேம்படுத்துதல். தாய்ப்பால் கொடுப்பதற்கான சூழல் உருவாக்குதல், தாய்ப்பால் கொடுப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், பாலுட்டுதலுக்கான ஆதரவு சேவைகளை சுகாதாரச்சேவை வழங்குபவர்கள் மூலம் வலுப்படுத்துதல். தாய்ப்பால் கொடுக்கும் விகிதத்தை அதிகப்படுத்துதல் மற்றும் ஊக்கப்படுத்துதலுக்கு இந்த ஒரு வாரம் முக்கியத்துவம் தரப்படுகிறது.
Also Read: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. ஒலிம்பிக் போட்டியில் அசத்திய ஸ்வப்னில் குசலே..
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஏற்கனவே பல்வேறு வகைகளிலான விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த இளம் சிசு இறப்பு விகிதத்தை ஏறத்தாழ 20 சதவிகிதம் தடுக்கும் வல்லமை வாய்ந்தது தாய்ப்பால் ஆகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை 13 சதவிகிதம் தடுக்க இது உதவியாக இருக்கின்றது என்று மருத்துவ வல்லூனர்கள் தங்களது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்து இருக்கிறார்கள். வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பிற்கான வாய்ப்புகளை 11 மடங்கு தாய்ப்பால் குறைக்கிறது. நிமோனியா மூலம் இறக்கும் வாய்ப்புகளை 15 மடங்கு குறைக்கவல்லது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. தொற்றா நோய்களின் தாக்கத்தை தடுக்க வல்லது.
இப்படி இந்த தாய்ப்பாலின் முக்கியத்தும் குறித்து உலகலாவிய விழிப்புணர்வு நிகழ்ச்சியாகத்தான் இது நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி 2016-2017 ஆண்டுகளில் பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் என்பது 54.7 ஆக இருந்தது. தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி அதுவே 2020 – 2021 ன்படி 60.2 ஆக உயர்ந்திருக்கிறது. ஆக குழந்தை பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் என்பது தொடர்ந்து இன்றைக்கு அதிகரித்து வருவது என்பது இந்த விழிப்புணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது தேசிய குடும்பநல கணக்கெடுப்பின்படி 2016-2017 ஆம் ஆண்டுகளில் ஒரு ஆறு மாதத்திற்கு தொடர்ச்சியாக தாய்ப்பாலூட்டும் சதவிகிதம் என்பது 48.3 ஆக இருந்தது. அது இப்போது 2020-2021 க்குப்பிறகு 55.1 ஆக உயர்ந்திருக்கிறது. ஆக தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் விகிதமும் உயர்ந்திருக்கிறது. குழந்தை பிறந்த உடனே 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கும் விகிதமும் உயர்ந்திருக்கிறது.
Also Read: சின்னத்திரை டூ சினிமா.. நடிகை மிருணாள் தாக்கூர் பற்றிய டாப் விஷயங்கள்!
இந்த ஆண்டினைப் பொறுத்தவரை உலக தாய்ப்பால் வாரத்திற்கான கருத்துரு என்று அறிவிக்கப்பட்டிருப்பது, தாய்ப்பால் ஊட்டுதலில் உள்ள இடைவெளியை தவிர்ப்போம், தாய்ப்பால் ஊட்டுதலை ஆதரிப்போம் என கருத்துரு இந்த ஆண்டிற்கான தாய்ப்பால் வாரத்திற்கான கருத்துருவாக பிரகனப்படுத்தப்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.