மதுரையில் பயங்கரம்.. இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்!
Madurai Crime News : மதுரை ஒத்தக்கடை பகுதியில் இளம்பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்த மறுத்த ஆத்திரத்தில் இளம்பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈவு இரக்கமின்றி அடித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் இளம்பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்த மறுத்த ஆத்திரத்தில் இளம்பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈவு இரக்கமின்றி அடித்துள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் லாவண்யா. இவர் அங்கிருக்கும் ஜெராக்ஸ் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் ஒருதலையாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் சித்திக் ராஜா கூறியும் உள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்க வேண்டும் என பலமுறை வற்புறுத்தி வந்தாக கூறப்படுகிறது.
இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர்
மேலும், இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் அடிக்கடி தகாறிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனாலும், அந்த பெண்ணை காதலிக்க மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இதனால் கடும் ஆத்திரத்தில் சித்திக் ராஜா இருந்துள்ளார். இந்த நிரவயில், நேற்று மாலை அந்த பெண் வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடைக்கு சென்றிருக்கிறார்.
அப்போது மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். அப்போதும் அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை கொடூரமாக அடித்துள்ளார். அதாவது, அந்த பெண்ணை கீழே தள்ளி தொடர்ந்து தாக்கி உள்ளார்.
இதில் அந்த பெண்ணுக்கு தலை, முகம், வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இளம்பெண்ணை அடித்துவிட்டு அங்கிருந்து சித்திக் ராஜா தப்பி சென்றிருக்கிறார்.
காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்
பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள சித்திக் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் சித்திக் ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒருதலைக்காதல், திருமணத்திற்கு மறுப்பு போன்ற காரணங்களால் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் நடந்து வருகின்றனர். இதனை தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும் நின்றபாடில்லை. நேற்று கூட தஞ்சாவூரில் திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் ஒருவரை அவரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.
Also Read : பழங்குடி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. மலத்தை சாப்பிட வைத்த கொடூரம்… ஷாக்!
தஞ்சையில் நடந்த கொடூரம்
இந்த சம்பவம் தமிழகத்தியே உலுக்கியது. அதாவது, தஞ்சாவூர் மாவட்டம் சின்னமலை பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (24). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை பள்ளியின் ஓய்வறையில் இருந்தார் ரமணி.
அப்போது திடீரென ஓய்வு அறைக்குள் புகுந்த 30 வயதான மதன் கையில் வைத்திருந்த கத்தியால் ரமணியின் வயிற்றில் குத்திவிட்டு சென்றுள்ளார். இதனால் ரமணி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை அறிந்த சக ஆசிரியர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து மதனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 2 ஆண்டுகளாக ரமணியும், மதனும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய ஆசைப்பபட்ட மதன் தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
Also Read : 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
இதனால், ரமணி வீட்டிற்கு பெண் பார்க்க சென்றிருக்கின்றனர். ஆனால், ரமணியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ரமணியும், மதனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மதன், ரமணியை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.