5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Savukku Shankar: திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி.. வெளியான தகவல்!

யூடியூபர் சவுக்கு சங்கர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அடைப்பை சரி செய்ய  ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Savukku Shankar: திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி.. வெளியான தகவல்!
சவுக்கு சங்கர்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Oct 2024 19:55 PM

யூடியூபர் சவுக்கு சங்கர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுதலையான நிலையில், தற்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். குறிப்பாக, திமுகவுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் சவுக்கு சங்கர். இவர் அண்மையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி

இந்த வழக்கில் கடந்த மே மாதம் தேனியில் இவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது இவர் மீது 2 முறை குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனை அடுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய், உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின் போது, எந்தவித காரணமும் இல்லாமல் சவுக்கு சங்கரை 2வது முறையாக காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாக அவரது தாயின் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது.

Also Read: ”இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தி காட்டம்..

இதில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து திரும்ப பெறுகிறோம் என தமிழக அரசு தெரிவித்தது. இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர், “கோவை சிறையில் இருந்தபோது எனது கை உடைத்தார்கள்.

என்னாச்சு?

எலும்பு முறிவு ஏற்பட்டது. உண்மையை பேச பயப்பட மாட்டேன். உண்மையை பேசியதால் என் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். வீடு சீல் வைக்கப்பட்டது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தவறுகள் பற்றி பேசக் கூடாது என்பதை முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் கவனமாக உள்ளனர்.

பல உண்மைகள் வெளியே வரக்கூடாது என்பதற்காகவே என் அலுவலகம் மூடப்பட்டது. தற்போது வெளியே வந்த நான், மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன்” என்று கூறியிருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், மீண்டும் திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார்.

Also Read: அலர்ட் மக்களே.. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை.. மற்ற மாவட்டங்கள் எப்படி?

இந்த நிலையில், இன்று மாலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சவுக்கு சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய  ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Latest News