Online Scam : வாட்ஸ்அப் குழுவால் வந்த ஆபத்து.. ரூ.50 லட்சம் பணத்தை இழந்த முதியவர்.. அதிர்ச்சி சம்பவம்! - Tamil News | 63 years old man lost 50 lakh rupees in online scam by using whatsapp group in Hyderabad | TV9 Tamil

Online Scam : வாட்ஸ்அப் குழுவால் வந்த ஆபத்து.. ரூ.50 லட்சம் பணத்தை இழந்த முதியவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Stock Market | ஹைதராபாத்தை சேர்ந்த 63 வயது முதியவர் ஸ்டாக் மார்க்கெட் தொடர்பான வாட்ஸ்அப் ஒன்றில் இணைந்துள்ளார். அவருக்கு அங்கு தான் பிரச்னை தொடங்கியுள்ளது. அந்த வாட்ஸ்அப் குழுவின் தலைவர் குனால் சிங் என்பவர் தன்னை பொருளாதார ஆலோசகர் என்று அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார்.

Online Scam : வாட்ஸ்அப் குழுவால் வந்த ஆபத்து.. ரூ.50 லட்சம் பணத்தை இழந்த முதியவர்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Published: 

06 Nov 2024 16:52 PM

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளும், சைபர் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த சிக்கல்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மோசடிக்காரர்கள் மக்களை எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். இத்தகைய ஆன்லைன் மோசடி சம்பவங்களுக்கு இரையாவது முதியவர்கள் தான். காரணம், முதியவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் முற்றிலும் புதிதானது என்பதால், மோசடிக்காரர்கள் அவர்களை எளிதாக தங்கள் வலையில் விழவைத்து விடுகின்றன. அந்த வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் இணைந்ததன் மூலம்  ரூ.50 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் தீபாவளி பரிசு மோசடி.. ரூ.4.5 லட்சம் பணத்தை இழந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

வாட்ஸ்அப் குழு மூலம் மோசடி செய்த கும்பல்

ஹைதராபாத்தை சேர்ந்த 63 வயது முதியவர் ஸ்டாக் மார்க்கெட் தொடர்பான வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைந்துள்ளார். அவருக்கு அங்கு தான் பிரச்னை தொடங்கியுள்ளது. அந்த வாட்ஸ்அப் குழுவின் தலைவர் குனால் சிங் என்பவர, முதியவரிடன் தன்னை ஒரு பொருளாதார ஆலோசகர் என்று அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி தான் ஸ்டாக் டிரேடிங் செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆசை காட்டி மோசம் செய்த நபர்

அந்த நபர் தான் 2022 ஆம் ஆண்டு வழிநடத்திய வகுப்புகள் வெற்றி பெற்றதாகவும், 500 சதவீதம் வருமானம் கிடைத்தாகவும் கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தைகள் மற்றும் அதிக பணம் வரும் என்ற ஆசையில் முதியவர் அந்த ஆன்லைன் ஸ்டாக் கோர்ஸில் இணைந்துள்ளார். அதன் மூலம் ட்ரிக்ஸ்களை கற்றுக்கொண்டு ஸ்டாக்கில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம் என்று  முதியவர் நினைத்துள்ளார்.

இதையும் படிங்க : WhatsApp : இனி போலி புகைப்படங்களுக்கு வாய்ப்பே இல்லை.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ள வாட்ஸ்அப்!

முதலீடு செய்ய வலியுறுத்திய கும்பல்

இந்த கோர்ஸுக்கான வகுப்புகளை பங்கேற்க முதியவருக்கு வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, ஸ்டாக்கில் எப்படி முதலீடு செய்ய  வேண்டும் என்று அந்த நபர் விவரித்துள்ளார். அதுமட்டுமன்றி, வகுப்பில் இணைந்த முதியவரையும் அவருடன் வகுப்பில் இருந்தவர்களையும் “Skyrim Capital” என்ற தளத்தில் முதலீடு செய்யுமாறு அந்த கும்பல் அறிவுறுத்தியுள்ளது. அது சிறந்த முதலீட்டிற்கான தளம் என்று  வகுப்பில் பங்கேற்றவர்களை அந்த கும்பல் ஏமாற்றியுள்ளது.

ரூ.50 லட்சம் முதலீடு செய்த முதியவர்

ஆரம்ப காலக்கட்டத்தில் வகுப்பில் இருந்தவர்கள் குறைந்த அளவில் பணத்தை முதலீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதில் இருந்து நல்ல வருமானம் வரவே, முதியவருக்கு முதலீடு செய்வதன் மீது அதிக நம்பிக்கை எழுந்துள்ளது. சில நாட்கள் கழித்து மோசடி கும்பல் முதியவரிடம் அதிக தொகையை முதலீடு செய்ய கூறியுள்ளது. அதாவது குறைந்தது ரூ.50 லட்சம் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படியே முதியவரும் ரூ.50 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இதையும் படிங்க : X Platform : இனி எக்ஸ் தளத்தில் இந்த தொல்லை இல்லை.. Block ஆப்ஷன் விரைவில் அறிமுகம்!

புகார் மீது தீவிர விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

மோசடி கும்பலின் அறிவுரைப்படி ரூ.50 லட்சம் பணத்தை முதலீடு செய்த முதியவர், அந்த பணத்திற்கான லாபத்தை திரும்ப எடுக்க முயற்சி செய்த போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதியவரின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், குற்றவாளிகளை பிடித்த தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டாக் மார்கெட்டில் முதலீடு செய்து லாபம் ஈட்ட நினைத்து முதியவர் ரூ.50 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் ஆல்பம்
சாய் பல்லவியின் ’ராமாயணம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
குழந்தையை பொறுப்பான நபராக வளர்க்க எளிய டிப்ஸ்!
மன்னிப்பு கேட்கக்கூடாத 10 நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?