5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Airtel & Jio : போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவிக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்.. முழு விவரம் இதோ!

Recharge Plans | இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெட் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் கட்டணத்தை உயர்த்திய நிலையில், 5ஜி சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சில கட்டுப்பாடுகளையும் விதித்தன. குறிப்பாக தினமும் 2ஜிபி டேட்டா அல்லது அதற்கும் மேல் உள்ள டேட்டா அளவு கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மட்டுமே 5ஜிபி சேவை வழங்கப்படும் என்று அறிவித்தது. 

Airtel & Jio : போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவிக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 30 Jul 2024 21:43 PM

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் : ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை உயர்த்தின. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள், ஜியோ மற்றும் ஏர்டெலில் இருந்து தங்களின் மொபைல் எண்ணை BSNL-க்கு மாற்றம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பயனர்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் ஜியோ அவ்வப்போது பல ஆஃபர்களையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோ மற்றும் ஏர்டல் நிறுவனக்கள் பல புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளன.

5ஜி சேவையை பயன்படுத்த கட்டுப்படுகளை விதித்த நிறுவனங்கள்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெட் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் கட்டணத்தை உயர்த்திய நிலையில், 5ஜி சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சில கட்டுப்பாடுகளையும் விதித்தன. குறிப்பாக தினமும் 2ஜிபி டேட்டா அல்லது அதற்கும் மேல் உள்ள டேட்டா அளவு கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மட்டுமே 5ஜிபி சேவை வழங்கப்படும் என்று அறிவித்தது.

கொத்து கொத்தாக BSNL-க்கு மாறிய பயனர்கள்

ஏற்கனவே விலையேற்றிய கோபத்தில் இருந்த பயனர்களை இந்த அறிவிப்பு மேலும் ஆத்திரமடைய செய்தது. காரணம் 2ஜிபி டேட்டா கொண்ட பிளான்கள் விலை அதிகமாக இருந்தன. இதனால் பல ஆயிரம் மக்கள் BSNL-க்கு மாறிய நிலையில், பயனர்களை மீண்டும் தனவசம் படுத்திக்கொள்ள ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், 5ஜி வேகத்தை மலிவு விலையில் வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டு அறிவித்து வருகின்றன.

இதையும் படிங்க : Price Decreased : ஐபோன் 14 முதல் 15 ப்ரோ மேக்ஸ் வரை.. அதிரடியாக விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்.. முழு விவரம் இதோ!

ஜியோவின் ரூ.349-க்கான ப்ரீபெய்டு பிளான்

ஜியோ நிறுவனம் தற்போது ரூ.349-க்கான ப்ரீ பெய்டு பிளான்களை அறிவித்துள்ளது. இந்த பிளான் 28 நாட்களுக்கான திட்டமாகும். இந்த திட்டம் மூலம் பயனர்கள் தினமும் 2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதுமட்டுமன்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 குறுஞ்செய்திகளையும் ஒரு நாளைக்கு அனுப்ப முடியும். இந்த திட்டத்தில் பயனர்கள் 5ஜி சேவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Jio : ஃப்ரீ இன்ஸ்டாலேஷன் .. அதிரடி சலுகையை அறிவித்த ஜியோ.. முழு விவரம் இதோ!

ஏர்டெல்லின் ரூ.379-க்கான ப்ரீபெய்டு பிளான்

ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.379-க்கான ப்ரீபெய்டு பிளான் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 குறுஞ்செய்திகளையும் ஒரு நாளைக்கு அனுப்ப முடியும். இந்த திட்டத்தில் பயனர்கள் 5ஜி சேவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News