5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Airtel : டேட்டா இலவசம்.. 3 நாட்களுக்கு ஃப்ரீ இன்டர்நெட்.. வயநாடு யூசர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

New Offer | கேரளாவில் நிலமையே தலைகீழாக மாறியுள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது அவசர நிவாரண சலுகையை வழங்கியுள்ளது. அதன்படி வயநாடு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிவாரண வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ப்ரீ பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில், ரீசார்ஜ் முடிந்துவிட்டால் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சேவைகளை வழங்குகிறது ஏர்டெல்.

Airtel : டேட்டா இலவசம்.. 3 நாட்களுக்கு ஃப்ரீ இன்டர்நெட்.. வயநாடு யூசர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 01 Aug 2024 13:14 PM

வயநாடு நிலச்சரிவு : கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வயநாடு மாவட்டத்தில் உள்ள உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்லுகலு உள்ளிட்ட பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. அதன்படி, நிலச்சரிவில் சிக்கி தவித்த 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் 280-க்கும்  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மீளா துயரில் கேரளா

கடந்த 3 நாட்களாக கேரளா கடும் துயரில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. கனமழையின் காரணமாக பாலங்கள் அடித்து செல்லப்பப்பட்டதால் தற்காலிக பாலங்கள் அமைத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவின் சாலைகளில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன. வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

இவ்வாறு கேரளாவில் நிலமையே தலைகீழாக மாறியுள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது அவசர நிவாரண சலுகையை வழங்கியுள்ளது. அதன்படி வயநாடு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிவாரண வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ப்ரீ பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில், ரீசார்ஜ் முடிந்துவிட்டால் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சேவைகளை வழங்குகிறது ஏர்டெல்.

இதையும் படிங்க : Airtel & Jio : போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவிக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்.. முழு விவரம் இதோ!

கட்டணம் செலுத்தாவிட்டாலும் சேவை வழங்கப்படும்

வாடிக்கையாளர்களின் தினசரி 1ஜிபி மொபைல் டேட்டா, வரம்பற்ற போன் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்தி அனுப்பும் வசதியையும் பெறலாம். கேரளாவின் கடுமையான இந்த பேரிடர் நேரத்தில் மக்களுக்கு அவசர தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவியாக இந்த சலுகைகளை ஏர்டெல் நிறுவன அறிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் போஸ்பெய்டு  வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, வயநாடு பயனர்களுக்கான கட்டணம் செலுத்த கூடுதலாக 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கட்டணம் செலுத்தாவிட்டாலும் அடுத்த ஒரு மாதத்திற்கு சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். 2 மாதங்களுக்கான கட்டணத்தை அடுத்த மாதம் செலுத்தினால் போதும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Wayanad Landslide : 282 பேர் உயிரிழப்பு.. மக்களை தேடும் மீட்புப்படை.. மனதை உலுக்கும் புகைப்படங்கள்!

நிவாரண உதவிகளையும் செய்யும் ஏர்டெல்

இது மட்டுமன்றி கேரளா முழுவதும் உள்ள தனது 52 சில்லறை விற்பனை கடைகளை, நிவாரண பொருட்களை சேகரித்து வைக்கும் மையங்களாக மாற்றியுள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கிருந்து வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News