Airtel : தினமும் 2GB டேட்டா உடன் “Hotstar” சேவை.. புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்! - Tamil News | Airtel launched new prepaid recharge plan with 2gb data on everyday at just 398 | TV9 Tamil

Airtel : தினமும் 2GB டேட்டா உடன் “Hotstar” சேவை.. புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!

Published: 

15 Dec 2024 13:30 PM

New Recharge Plan | ஏர்டெல் நிறுவனம் பல்வேறு மாததிர மற்றும் வருடாந்திர ப்ரீபெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ரூ.398-க்கான புதிய ப்ரீப்ர்ய்டு ரீச்சார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

1 / 5இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தின. குறிப்பாக, ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக விலை ஏற்றம் செய்தனர். 

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தின. குறிப்பாக, ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக விலை ஏற்றம் செய்தனர். 

2 / 5

இந்த கடும் விலை உயர்வை கண்டித்து ஏராளமான பொதுமக்கள் அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புக்கு மாற தொடங்கினர். இதனால், இழந்துப்போன பயனர்களை மீட்கும் வகையில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

3 / 5

இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது ஒரு புதிய ப்ரீபெய்டு ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 28 நாட்கள் வேலிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்டு ரீச்சார்ஜ் திட்டம் ரூ.398-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

4 / 5

ஏர்டெலின் இந்த புதிய 28 நாட்களுக்கான திட்டத்தில், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடட் வாய்ஸ் கால் சேவையை வழங்குவது மட்டுமன்றி, தினமும் இலவசமாக சுமார் 100 குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியையும் வழங்குகிறது. 

5 / 5

இந்த திட்டத்தில் கூடுதலாக இலவச ஹாட்ஸ்டார் மொபைல் சேவை வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்தால், மொபைல் செயலியில் கட்டணம் செலுத்தாமல் ஹாட்ஸ்டார் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமும் ஒரு பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
உங்கள் குழந்தைகள் புத்திசாலிகளா - தெரிந்துக்கொள்வது எப்படி?
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
கோபம் வரும்போது அழுகை வருவது ஏன் - அறிவியல் கூறுவது என்ன?