5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Airtel : இனி மோசடிகள் குறித்து கவலை இல்லை.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் சேவை.. முற்றிலும் இலவசம்!

Free Service | டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்த, சைபர் குற்றங்களும் வளர்ந்துக்கொண்டே செல்கின்றன. தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடும் மோசடி கும்பல்கள், அவர்களுக்கு போன் செய்து, ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடுகின்றன.

Airtel : இனி மோசடிகள் குறித்து கவலை இல்லை.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் சேவை.. முற்றிலும் இலவசம்!
ஏர்டெல்
vinalin
Vinalin Sweety | Published: 09 Oct 2024 18:35 PM

டிஜிட்டல் வளர்ச்சியில் உலகம் மிக வேகமாக முன்னேறிக்கொண்டே செல்கிறது. டிஜிட்டல் செயலிகள் மற்றும் சேவைகள் மூலம், பொதுமக்களின் நேரம் சேமிக்கப்படுவதோடு, வேலையையும் எளிதாக்குகிறது. ஆனால், இந்த டிஜிட்டல் சேவைகளில் பல சிக்கல்களும், ஆபத்துகளும் நிறைந்துள்ளன. டிஜிட்டல் வளர்ச்சியின் ஒரு பகுதியாக டிஜிட்டல் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. தகவல் திருட்டின் மூலம் ஏராளமான குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்கும் முயற்சியில் தான் தற்போது ஏர்டெல் நிறுவனம் இறங்கியுள்ளது. அதாவது, ஏர்டெல் நிறுவனம் ஸ்பேம் கால்களை கண்டறிந்து மோசடிகளை தடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.

இதையும் படிங்க : Flipkart Utsav Sale : மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!

ஏர்டெலின் இந்த சேவை குறித்து விளக்கிய சந்தீப்

இது குறித்து கூறிய தமிழ்நாடு ஏர்டெல் மார்கெட்டிங் குழு தலைவர் சந்தீப், மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 3 ஸ்பேம் அழைப்புகள் வருகிறது. இதை தடுக்க செயற்கை நுண்ணறிவின் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது, Suspected Spam அம்சம் முதல் முறையாக அறிமுகம் செய்யபப்டுகிறது. இந்த சோதையின் மூலம் ஸ்பேம் என கண்டறியப்படும் மொபைல் எண்களை எடுத்து, அவற்றை ஆய்வு செய்து, அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அறிந்துக்கொண்டு அந்த எண் Suspected Spam என குறிப்பிடப்படும்.

இதையும் படிங்க : Lava Agni 3 : டூயல் டிஸ்பிளே கொண்ட லாவா அக்னி 3.. இன்று முதல் விற்பனை.. சிறப்பு சலுகைகள் என்ன என்ன?

மோசடி எண்கள் திரையில் Suspected Spam என தோன்றும்

இவ்வாறு குறிப்பிடும் பட்சத்தில், அவ்வாறு குறிப்பிடப்பட்ட எண்ணில் இருந்து பயனர்களுக்கு அழைப்பு வந்தால் திரையில் Suspected Spam என காட்டும். தமிழிலும் இது காட்டும். இவ்வாறு திரையில் தோன்றுவதன் மூலம், மோசடிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். அழைப்புகள் மட்டுமன்றி குறுஞ்செய்திகளிலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதம் மூலம் சுமார் 3 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த வசதியை பயன்படுத்த தனியாக செயலி எதுவும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Oneplus 13 : விரைவில் அறிமுகமாக உள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

அதிகரிக்கும் சைபர் மோசடிகள்

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்த, சைபர் குற்றங்களும் வளர்ந்துக்கொண்டே செல்கின்றன. தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடும் மோசடி கும்பல்கள், அவர்களுக்கு போன் செய்து, ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடுகின்றன. சில மோசடி கும்பல்கள் பொதுமக்களை தொடர்புக்கொண்டு உயர் அதிகாரிகளை போல பேசி, மிரட்டி தங்களது வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும், அல்லது விவரங்களை தர வேண்டும்  என நிர்பந்திக்கின்றனர். அவற்றை நம்பும் அப்பாவி மக்கள், மோசடி கார்ரகள் கேட்பவற்றை செய்கின்றனர். இதன் மூலம் முக்கிய தகவல்கள் திருடப்ப்பட்டு மோசடி சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது.

இதையும் படிங்க : Free Apple AirPod : தீபாவளி சலுகை.. இலவசமாக ஏர்பாட் வழங்கும் ஆப்பிள்.. 2 நாட்களுக்கு மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!

இத்தகைய மோசடிகளில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தடுக்கும் நோக்கத்தில் தான் ஏர்டெல் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெலின் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News