5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Airtel : 84 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. ஏர்டெலின் அசத்தலான 3 திட்டங்கள்!

Recharge Plans | ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். அதன்படி சாரை சாரையாக மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர்.இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான பல சலுகைகளுடன் கூடிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தொடங்கின. அந்த வகையில் ஏர்டல் நிறுவனம் வழங்கும் 3 சிறந்த திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

Airtel : 84 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. ஏர்டெலின் அசத்தலான 3 திட்டங்கள்!
ஏர்டெல்
vinalin
Vinalin Sweety | Published: 08 Oct 2024 23:15 PM

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பயனர்களை இது கோபமூட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். அதன்படி சாரை சாரையாக மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர்.இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான பல சலுகைகளுடன் கூடிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தொடங்கின. அந்த வகையில் ஏர்டல் நிறுவனம் வழங்கும் 3 சிறந்த திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Lava Agni 3 : இந்தியாவில் இன்று அறிமுகமானது லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஏர்டெலின் ரூ.859-க்கான ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.859-க்கான ப்ரீபெய்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம், மொத்தம் 126 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா என்ற அளவின்படி வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்டெலின் இந்த ரூ.859-க்கான ப்ரீபெய்டு திட்டத்தில் அன்லிமிடெட் போன்கள் கால்கள் பேசுவதற்கான சலுகையும் உள்ளது. அதுமட்டுமன்றி தினசரி 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் சலுகையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Apple Diwali Sale : ஆப்பிள் தீபாவளி சேல்.. ஏர்பாட்ஸ் மற்றும் வாட்ச்களுக்கு அதிரடி சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஏர்டெலின் ரூ.979-க்கான ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.979-க்கான ப்ரீபெய்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம், மொத்தம் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்ற அளவின்படி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தினசரி 2ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், உங்கள் மொபைல் இண்டர்நெட் வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறையும். இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்தால் சுமார் 22 ஓடிடி தளங்களை பயன்படுத்த முடியும். இதுதவிர ஏர்டெலின் இந்த ரூ.859-க்கான ப்ரீபெய்டு திட்டத்தில் அன்லிமிடெட் போன்கள் கால்கள் பேசுவதற்கான சலுகையும் உள்ளது. அதுமட்டுமன்றி தினசரி 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் சலுகையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : iPhone Diwali Sale : ஸ்மார்ட்போன்கள் முதல் மேக் புக் வரை.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கும் ஆப்பிள்!

ஏர்டெலின் ரூ.1199-க்கான ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.1199-க்கான ப்ரீபெய்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம், மொத்தம் 210 ஜிபி டேட்டா கிடைக்கும். அதுமட்டுமன்றி இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவும் கிடைக்கும். இதுதவிர ஏர்டெலின் இந்த ரூ.1199-க்கான ப்ரீபெய்டு திட்டத்தில் அன்லிமிடெட் போன்கள் கால்கள் பேசுவதற்கான சலுகையும் உள்ளது. அதுமட்டுமன்றி தினசரி 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் சலுகையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News