Airtel : ப்ரீபெய்டு திட்டங்களுக்கு காப்பீட்டு பலன்களை வழங்கும் ஏர்டெல்.. அந்த 3 திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் என்ன?

Recharge Plans | ஏர்டெலின் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகிய திட்டங்களில் விபத்துக்கான காப்பீட்டு பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 3 ப்ரீ பெய்டு திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஏர்டெலின் மருத்து காப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

Airtel : ப்ரீபெய்டு திட்டங்களுக்கு காப்பீட்டு பலன்களை வழங்கும் ஏர்டெல்.. அந்த 3 திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

24 Oct 2024 16:38 PM

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், நெட்வொர்க் சேவைகளை வழங்கி வரும் நிலையில் பயனர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, ஏர்டெல் தனது 3 ப்ரீபெய்டு திட்டங்களில் மருத்துவ காப்பீட்டு பலன்களை வழங்கியுள்ளது. அந்த மூன்று திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டிற்கான பலன்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், அந்த 3 ப்ரீபெய்டு திட்டங்கள் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன எனப்து குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Budget Smartphones : ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. தீபாவளி சேலில் அதிரடி சலுகை!

ஏர்டெல் மருத்து காப்பீட்டின் சிறப்பு பலன்கள்

ஏர்டெலின் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகிய திட்டங்களில் விபத்துக்கான காப்பீட்டு பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 3 ப்ரீ பெய்டு திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ லோம்பார்டு காப்பீட்டு நிறுவனத்துடன் தங்களது விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை அங்கீகரிப்பார்கள். இதன் மூலம் அவர்களின் இன்சூரன்ஸ் உறுதி செய்யப்படும். இந்த காப்பீடு திட்டத்தின் மூலம், விபத்தில் உயிரிழப்போருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோறுக்கு ரூ.25,000 பணமும் வழங்கப்படும் என்று ஏர்டெல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Amazon Prime : இனி திரைப்படங்களுக்கு நடுவே விளம்பரம் தோன்றும்.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்!

ஏர்டெலின் ரூ.239-க்கான திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

ஏர்டெலின் இந்த ரூ.239-க்கான ப்ரீபெய்டு திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 56ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டின் கால அளவு 30 நாட்களாக உள்ளது.

இதையும் படிங்க : Zomato : தீபாவளியை முன்னிட்டு பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ.. எவ்வளவு தெரியுமா?

ஏர்டெலின் ரூ.399-க்கான திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

ஏர்டெலின் இந்த ரூ.239-க்கான ப்ரீபெய்டு திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 84 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டின் கால அளவு 30 நாட்களாக உள்ளது.

இதையும் படிங்க : Moto : பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

ஏர்டெலின் ரூ.969-க்கான திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

ஏர்டெலின் இந்த ரூ.969-க்கான ப்ரீபெய்டு திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு மாதத்திற்கு 126 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களாக உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டின் கால அளவு 90 நாட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Xiaomi 15 : இன்று அறிமுகமாகிறது ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!

மேற்குறிப்பிட்ட ஏர்டெலின் இந்த 3 ப்ரீ பெய்டு திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் பயனர்கள் விபத்தில் உயிரிழந்துவிட்டால் அவர்களுக்கு ரூ.1 லட்சமும், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் ரூ.25,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?
புரதத்தை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
... இதுதான் அதுக்கு காரணம் - ஐஸ்வர்ய லட்சுமி