உலகில் அதிக ஊழியர்களை கொண்ட முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் விளங்குகிறது. இந்த நிலையில் அமேசான் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பால் உழியர்கள் கவலையில் உள்ளனர்.
அதாவது வரும் ஜனவரி 2025, முதல் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வாரத்திற்கு 5 நாட்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கூறியுள்ளது.
அமேசான் நிறுவனத்தில், வீட்டில் இருந்தே பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள அமேசான் நிறுவனத்தின் CEO மேட் கார்மன், அனைவரும் இணைந்து ஒன்றாக பணியாற்றுவதுதான் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே அனைவரும் கட்டாயம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி, அலுவலகத்திற்கு வர விருப்பமில்லாத ஊழியர்கள் தங்களுக்கு ஏற்ற வேறு ஏதேனும் பணிகளை தேடிக்கொள்ளலாம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.