Apple Watch : அட்டகாசமான தோற்றம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ் .. முழு விவரம் இதோ! - Tamil News | Apple 10 series watch introduced in India know the price and special features of it in Tamil | TV9 Tamil

Apple Watch : அட்டகாசமான தோற்றம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ் .. முழு விவரம் இதோ!

Updated On: 

10 Sep 2024 15:27 PM

Its Glowtime | ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சி நேற்று கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இது ஆப்பிள் நிறுவனத்தில் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆப்பிள், ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

1 / 7நேற்று

நேற்று கலிஃபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் சீரீஸ் 16, ஆப்பிள் வாட்ஸ் சீரீஸ் 10 மற்றும் ஆப்பிள் ஏர்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 

2 / 7

மக்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆப்பிள் வாட்ஸ் சீரீஸ் 10 அறிமுக செய்யப்பட்ட நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

3 / 7

அதன்படி ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 10 பெரிய OLED டிஸ்பிளே மற்றும் மெல்லிய பெசில்ஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 45mm மற்றும் 49mm ஆகிய தேர்வுகளில் வருகிறது. 

4 / 7

இந்த வாட்சின் பின்புறத்தில் பிளாக் மெட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீடித்து உழைக்கும் தன்மையுடன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த வாட்ஸ் வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகும் சிறப்பையும் கொண்டுள்ளது. 

5 / 7

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு பதிலாக இதில் டைட்டானியம் கொடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வெளியான வாட்ச் மாடல்களை விட சற்று எடை குறைவாகவும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

6 / 7

Sleep Apnea Detection என்ற புதிய அம்சம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பயணர்களுக்கு தூங்கும் போது மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. தூங்கும்போது மூச்சுதிணறல் ஏற்படும் பட்சத்தில் படுக்கையிலே உயிர் பிரிந்துவிடும் அபாயம் உள்ளதால் இந்த புதிய அம்சம் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

7 / 7

இந்த வாட்சின் GPS வெர்ஷன் 399 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் ரூ.46,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதேபோல GPS+ வெர்ஷன் வாட்ச் 499 டாலர்களுக்கு விற்பனை செய்யபப்டுகிறது. இது இந்தியாவில் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!