Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ! - Tamil News | Apple 16 series smartphones booking starts today know how to pre book through both online and offline in Tamil | TV9 Tamil

Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!

Published: 

13 Sep 2024 14:32 PM

Pre Book | கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ப்ரீ புக்கிங் இன்று முதல் தொடங்க உள்ளது.

Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!

ஐபோன் 16 (Photo Credit : Apple Website)

Follow Us On

ஆப்பிள் 16 சீரீஸ் மொபைல் போன்கள் : சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின், ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆப்பிள் இன்று முதல் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ புக்கிங்கை தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை எங்கு ப்ரீ ஆர்டர் செய்வது, அதற்கு வழங்கப்படும் அறிமுக சலுகைகள் மற்று தள்ளுபடிகள் என்ன, ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவது சிறந்ததா, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது உள்ளிட்ட முக்கிய தகவலக்ளை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!

இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சியில் அறிமுக செய்யப்பட்ட ஆப்பிள் 16 சீரீஸ்

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ப்ரீ புக்கிங் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி சரியாக மலை 5.30 மணிக்கு மேல் இந்த ப்ரீ புக்கிங் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போனகளை ப்ரீ புக் செய்வது எப்படி?

ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை ப்ரீ புக் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆப்பிள் ஸ்டோரில் சென்று ப்ரீ புக் செய்வது, ஆப்பிள் இணையதளம், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட தளங்களிலும் ப்ரீ புக் செய்துக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. ப்ரீ புக்கிங் செய்ய விருப்பமில்லாதவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் அல்லது ஆஃப் லைனில் பணம் செலுத்தி கைகளிலேயே ஐபோன் 16 ஸாம்ர்ட்போனை வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : iPhone Price Drop : அதிரடியாக விலை குறைந்த ஐபோன் 14 மற்றும் 15.. ரூ.10,000 வரை தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை பட்டியல்

ஐபோன் 16 ஸ்மார்ட்போன் : 128 ஸ்டோரேஜ் ஜிபி அமசம் கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட் போன் ரூ.79,900-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல 256 ஜிபி ஸ்ட்ரோரேஜ் அம்சம் ஐபோன் 16 ஸ்மார்ட் போன் ரூ.89,900-க்கு 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட் போன் ரூ.1,09,900-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் : 128 ஸ்டோரேஜ் ஜிபி அமசம் கொண்ட ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.89,900-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல 256 ஜிபி ஸ்ட்ரோரேஜ் அம்சம் ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.99,900-க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.1,11,900-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் : 128 ஸ்டோரேஜ் ஜிபி அமசம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் போன் ரூ.1,19,900-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல 256 ஜிபி ஸ்ட்ரோரேஜ் அம்சம் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் போன் ரூ.1,29,900-க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் போன் ரூ.1,49,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 டிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,69,900-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் : 256 ஜிபி அமசம் ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட் ப்ரோ மேக்ஸ் போன் ரூ.1,44,900-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போன் ரூ.1,64,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 டிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,84,900-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Apple Watch : அட்டகாசமான தோற்றம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ் .. முழு விவரம் இதோ!

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் ப்ரீ புக் செய்வது எப்படி?

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் ப்ரீ புக் செய்ய ஆப்பிள் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் சர்ச் பாரில் நீங்கள் வாங்க விரும்பும் ஐபோன் மாடலை பதிவிடவும். நீங்கள் மாடலை பதிவிட்ட உடன் உங்களுக்கு அது தொடர்பான விவரங்கள் கிடைக்கும். அவற்றை சரிபார்த்த பிறகு நீங்கள் மொபைல் போன் வாங்க உறுதியாக இருந்தீர்கள் என்றால் அங்கு ப்ரீ புக் என கொடுக்கப்பட்டிருக்கும் அம்சத்தை கிளிக் செய்து புக் செய்துக்கொள்ளலாம். இதேபோல அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களிலும் ப்ரீ புக் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version