Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்! - Tamil News | Apple Airpod 4 series launched with amazing techniques know the specifications and price in Tamil | TV9 Tamil

Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!

Updated On: 

11 Sep 2024 15:26 PM

Its Glowtime | உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் சந்தையில் அறிமுகமானது. ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஏர்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

1 / 5சமீபத்தில்

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் "இட்ஸ் க்ளோடைம்" நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ் மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 சீரீஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 

2 / 5

இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 சீரீஸ் பல புதிய நவீன அம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவு பல புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 

3 / 5

இந்த ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 சீரீஸில் தலை அசைப்பதின் மூலம் போன் கால்களை அட்டன் செய்யும் புதிய அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏர்பாடை காதில் பொருத்திக்கொண்டிருக்கும்போது போன் கால் வந்தால் நீங்கள் தலையை அசைத்தால் மட்டும் போது. இவ்வாறு தலையை அசைப்பதன் மூலம் போன் கால்களை அட்டன் அல்லது டிக்லைன் செய்துக்கொள்ளலாம். 

4 / 5

இந்த ஏர்பாடில் Type-C சார்ஜிங் வசதி, மேம்படுத்தப்பட்ட ஒலியமைப்பு, 30 மணி நேர பேட்டரி திறன், எளிதாக அணியக்கூடிய வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

5 / 5

இந்த ஏர்பாட்ஸ் 2 வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. அதன்படி, Standard Airpods 4 ரூ.12,900-க்கும், Airpods 4 ANC ரூ.17,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அட்டகாசமான ஏர்பாட் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!