Apple Diwali Sale : ஆப்பிள் தீபாவளி சேல்.. ஏர்பாட்ஸ் மற்றும் வாட்ச்களுக்கு அதிரடி சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க! - Tamil News | Apple announced exciting offers for smartwatch and airpods on Diwali 2024 sale | TV9 Tamil

Apple Diwali Sale : ஆப்பிள் தீபாவளி சேல்.. ஏர்பாட்ஸ் மற்றும் வாட்ச்களுக்கு அதிரடி சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!

Published: 

03 Oct 2024 18:29 PM

Special Offer | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏர்பாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி ஏர்பாடுகள் வாங்கும் நபர்களுக்கு ரூ.4,000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Apple Diwali Sale : ஆப்பிள் தீபாவளி சேல்.. ஏர்பாட்ஸ் மற்றும் வாட்ச்களுக்கு அதிரடி சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஆப்பிள் அதிரடி சலுகை

Follow Us On

அக்டோபர் 31 ஆம் தேதி தீபாளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் விழாக்கால சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன், டேப் மற்றும் மேக் புக் ஆகியவற்றுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ஏர்பாட்ஸ் மற்றும் வாட்ச்களுக்கு சிறப்பு சலுகைகளை ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தீபாவளி சேல் இன்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில் என்ன என்ன சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம். ஆப்பிளின் இந்த அதிரடி சலுகையில் அதிகபட்சமாக ரூ.6,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : OnePlus 12 : ஒன்பிளஸ் 12-க்கு ரூ.9,000 வரை அதிரடி தள்ளுபடி.. விஜய் சேல்ஸின் சூப்பர் ஆஃபர்.. முழு விவரம் இதோ!

ஆப்பிள் வாட்ச்களுக்கான தீபாவளி சலுகை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆப்பிள் வாட்ச்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2-க்கு தீபாவளி சலுகையாக ஆப்பிள் நிறுவனம் ரூ.6,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
  • ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 10-க்கு தீபாவளி சலுகையாக ஆப்பிள் நிறுவனம் ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
  • ஆப்பிள் வாட்ச் SE 2-க்கு தீபாவளி சலுகையாக ஆப்பிள் நிறுவனம் ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.

மேற்குறிப்பிட்ட இந்த வாட்ச்களுக்கு 12 மாதங்கள் வரை ஆப்பிள் நிறுவனம் No Cost EMI வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Google Pixel 9 Pro XL : ரூ.10,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல்.. முழு விவரம் இதோ!

ஆப்பிள் ஏர்பாடுகளுக்கான தீபாவளி சலுகை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏர்பாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி ஏர்பாடுகள் வாங்கும் நபர்களுக்கு ரூ.4,000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஏர்பாட்ஸ் ப்ரோக்கு (AirPods Pro) தீபாவளி சலுகையாக ஆப்பிள் நிறுவனம் ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
  • ஏர்பாட்ஸ் 4-க்கு ( AirPods ) தீபாவளி சலுகையாக ஆப்பிள் நிறுவனம் ரூ.1,500 வரை தள்ளுபடி வழங்குகிறது.
  • ஏர்பாட்ஸ் 4 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனுக்கு (AirPods 4 Active Noise Cancellation) தீபாவளி சலுகையாக ஆப்பிள் நிறுவனம் ரூ.1,500 வரை தள்ளுபடி வழங்குகிறது.
  • ஏர்பாட்ஸ் மேக்ஸ்-க்கு (AirPods Max) தீபாவளி சலுகையாக ஆப்பிள் நிறுவனம் ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.

இதையும் படிங்க : WhatsApp : மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் WhatsApp-ல் மெசேஜ் அனுப்புவது எப்படி.. ரொம்ப சிம்பிள்!

மேற்குறிப்பிட்ட இந்த ஏர்பாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் 6 மாதங்கள் வரை No Cost EMI வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் 3 மாதங்களுக்கான இலவச ஆப்பிள் மியூசிக் சேவையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலவசமாக வழங்கப்படும் Beats Solo Buds

தீபாவளி சலுகையை பயன்படுத்தி ஆப்பிள் ஸ்டோர்களில் ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு Beats Solo Buds இலவசமாக வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோர்களில் ஸ்டாக் இருக்கும் வரை இந்த இலவச Beats Solo Buds வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தில் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!

Beats Solo Buds சிறப்பு அம்சங்கள்

ஆப்பிள் தீபாவளி சிறப்பு சலுகையில் ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த Beats Solo Buds பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி, இந்த Beats Solo Buds 18 மணி நேரம் நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. இது மேட் பிளாக், ஸ்டார்ம் கிரே, ஆர்க்டிக் பர்பிள் மற்றும் டிரான்ஸ்பேரன் ரெட் ஆகிய அசத்தலான நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஏர்பாட்சின் விலை ரூ.6,900 என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version