5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

iPhone Diwali Sale : ஸ்மார்ட்போன்கள் முதல் மேக் புக் வரை.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கும் ஆப்பிள்!

Exciting Offer | ஆப்பிள் நிறுவனத்தில் தீபாவளி சலுகையில் பயனர்களுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி ஐபோன் வாங்கும் பயனர்களுக்கு இது பொருந்தும். 

iPhone Diwali Sale : ஸ்மார்ட்போன்கள் முதல் மேக் புக் வரை.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கும் ஆப்பிள்!
ஆப்பிள் ஐபோன்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 03 Oct 2024 17:50 PM

அக்டோபர் 31 ஆம் தேதி தீபாளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் விழாக்கால சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன், டேப் மற்றும் மேக் புக் ஆகியவற்றுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் தீபாவளி சேல் இன்றுமுதல் தொடங்கியது. ஏற்கனவே பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகியவற்றில் ஐபோன் விலை அதிரடியாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் சிறந்த அம்சங்களை கொண்ட ஆப்பிள் ஐபோன்களை குறைந்த விலையில் வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Google Pixel 9 Pro XL : ரூ.10,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல்.. முழு விவரம் இதோ!

ஆப்பிள் ஐபோன்களுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி

ஆப்பிள் நிறுவனத்தில் தீபாவளி சலுகையில் பயனர்களுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி ஐபோன் வாங்கும் பயனர்களுக்கு இது பொருந்தும்.

  • அதன்படி ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி சலுகையாக ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • இதேபோல ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி சலுகையாக ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி சலுகையாக ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • மேலும் ஐபோன் SE ஸ்மார்ட்போனுக்கு தீபாவளி சலுகையாக ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : OnePlus 12 : ஒன்பிளஸ் 12-க்கு ரூ.9,000 வரை அதிரடி தள்ளுபடி.. விஜய் சேல்ஸின் சூப்பர் ஆஃபர்.. முழு விவரம் இதோ!

ஆப்பிள் ஐபோன்களுக்கு மேற்குறிப்பிட்ட சலுகைகள் போக, பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பட்சத்தில் ரூ.67,500 வரை பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, ஆப்பிள் தீபாவளி சேலில் ஐபோன் வாங்கும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கான ஆப்பிள் ஃப்ரீ மியூசிக் மற்றும் 3 மாதங்களுக்கான ஆப்பிள் டிவி இலவசமாக வழங்கப்படும்.

 மேக் புக்குகளுக்கு அதிரடி சலுகைகளை வழங்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தில் தீபாவளி சலுகையில் மேக் புக்குகளுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

  • ஆப்பிள் MacBook Air (M3 Chip) 13 மற்றும் 15 ஆகியவற்றுக்கு தீபாவளி சலுகையாக ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஆப்பிள் MacBook Air (M2 Chip) 13-க்கு தீபாவளி சலுகையாக ரூ.8,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஆப்பிள் MacBook Pro 14 மற்றும் 16 ஆகியவற்றுக்கு தீபாவளி சலுகையாக ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஆப்பிள் Mac Studio-க்கு தீபாவளி சலுகையாக ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஆப்பிள் iMac 24-க்கு தீபாவளி சலுகையாக ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஆப்பிள் Mac Mini-க்கு தீபாவளி சலுகையாக ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Samsung Galaxy S24 FE : சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஆப்பிள் ஐபோனுக்கு இலவசமாக வழங்கப்படும் Beats Solo Buds

தீபாவளி சலுகையை பயன்படுத்தி ஆப்பிள் ஸ்டோர்களில் ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு Beats Solo Buds இலவசமாக வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோர்களில் ஸ்டாக் இருக்கும் வரை இந்த இலவச Beats Solo Buds வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தில் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!

Beats Solo Buds சிறப்பு அம்சங்கள்

ஆப்பிள் தீபாவளி சிறப்பு சலுகையில் ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த Beats Solo Buds பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி, இந்த Beats Solo Buds 18 மணி நேரம் நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. இது மேட் பிளாக், ஸ்டார்ம் கிரே, ஆர்க்டிக் பர்பிள் மற்றும் டிரான்ஸ்பேரன் ரெட் ஆகிய அசத்தலான நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஏர்பாட்சின் விலை ரூ.6,900 என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News