5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Apple 15 Series : இன்னும் 3 நாட்கள் மட்டும் தான்.. மீண்டும் விலையேற போகும் ஐபோன் 15.. மிஸ் பண்ணிடாதீங்க!

Flipkart Big Billion Days | பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சேலில் ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு சராசரியாக ரூ. 20,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், ஐபோன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Apple 15 Series : இன்னும் 3 நாட்கள் மட்டும் தான்.. மீண்டும் விலையேற போகும் ஐபோன் 15.. மிஸ் பண்ணிடாதீங்க!
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 02 Oct 2024 20:47 PM

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலை முன்னிட்டு ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபோன் 16 சீரீஸ் அறிமுகத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் விலை குறைப்பு செய்த நிலையில், தற்போது பிக் பில்லியன் டேஸ் சேலை முன்னிட்டு பிளிப்கார்ட் அதிரடி சலுகையை வழங்கி உள்ளது. பிளிக்பார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 6 ஆம் தேதியுடன் பிக் பில்லியன் டேஸ் சேல் நிறைவடைய உள்ள நிலையில், ஐபோன் 15 சீரீஸ் ச்மார்ட்போன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Google Pixel 9 Pro XL : ரூ.10,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல்.. முழு விவரம் இதோ!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சேலில் ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு சராசரியாக ரூ. 20,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், ஐபோன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : WhatsApp : மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் WhatsApp-ல் மெசேஜ் அனுப்புவது எப்படி.. ரொம்ப சிம்பிள்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேச் சேல் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்கள் வரை அனைத்தும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆப்பிள் ஐபோன் 15 இந்தியாவில் ரூ.79,999-க்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த ஆப்பிள் ஐபோன் 15 ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் ஐபோன் 15-ன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 15-ன் பிளிப்கார்ட் விலை

ஆப்பிள் ஐபோன் 15, ஆப்பிள் இணையதளத்தில் ரூ.69,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலில் வெறும் ரூ.57,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஐபோன் 15-க்கு பிளிப்கார்ட் மொத்தம் ரூ.11.901 தள்ளுபடியாக வழங்குகிறது. அதுமட்டுமன்றி எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் 15 வாங்கினால் 10% சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அதாவது ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : OnePlus 12 : ஒன்பிளஸ் 12-க்கு ரூ.9,000 வரை அதிரடி தள்ளுபடி.. விஜய் சேல்ஸின் சூப்பர் ஆஃபர்.. முழு விவரம் இதோ!

ஐபோன் 15 ப்ரோவின் பிளிப்கார்ட் விலை

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,999-க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.1,06,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் சுமார் ரூ.28,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அதுமட்டுமன்றி யுபிஐ பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கும் பட்சத்தில் ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ. 1,34,999 மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.1,02,999-க்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் பிளிப்கார்ட் விலை

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.1,26,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Samsung Galaxy S24 FE : சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

இவ்வாறு அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் மாடல்கள் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலுக்கு பிறகு மீண்டும் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News