iPhone 16 Series : சந்தையில் அறிமுகமானது ஐபோன் 16 சீரீஸ்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

New iPhone Series | ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஏர்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

iPhone 16 Series : சந்தையில் அறிமுகமானது ஐபோன் 16 சீரீஸ்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

ஐபோன் 16 சீரீஸ் (Photo Credit : Apple official website)

Updated On: 

10 Sep 2024 12:08 PM

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் : உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் நேற்று சந்தையில் அறிமுகமானது. ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஏர்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிளின் இந்த புது வரவு குறித்து ஆப்பிள் பயனர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் என்ன மற்றும் விலை அம்சங்கள் ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் இருந்து மற்ற செயலிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

“இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன்கள் ஆகும். சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களாக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த முறை வெளியான ஐபோன் 15 சீரீஸை போலவே இந்த 16 சீரீஸும் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ்

ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் Aerospace – Grade Aluminum கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு, வெள்ளை உள்ளிட்ட 5 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐபோன் 16-ல் 6.1 இன்ச் டிஸ்பிளே அம்சம் உள்ள நிலையில், ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்பிளே அம்சம் உள்ளது. இந்த இரண்டு மாடல்களும் 2000 நிட்ஸ் வரை பிரைட்னஸ் அம்சத்தை கொண்டுள்ளன. இந்த புதிய ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு கிளிக்கில் கேமராவை ஓப்பன் செய்வது, இரண்டாவது கிளிக்கில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது என சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஐபோன் 16-ல் 48 மெகாபிக்சல் கொண்ட மெயின் கேமரா உள்ளது. அதுமட்டுமன்றி அது 2X டெலிபோட்டோ அம்சத்தையும் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 6.9% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் புதிய கோல்டன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் டிஸ்பிளே அம்சம் கொண்டுள்ளது. இதேபோல ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் டிஸ்பிளே அம்சம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களும் மிகவும் மெல்லிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களில் ட்ரிபில் ரியர் கேமரா அம்சம் அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த தரத்துடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க மிகவும் பயனுள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை என்ன?

ஐபோன் 16 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 799 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.67,000 ஆகும். இதேபோல ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் 899 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.75,000 ஆகும். 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்துடன் கூடிய ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 999 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.83,870 ஆகும். இதேபோல 256 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 1199 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஐபோன் 16 ரூ.79,900-க்கும் ஐபோன் 16 பிளஸ் ரூ.89,000-க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900-க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 333 நாட்களுக்கான FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் இந்தியா.. வட்டி எவ்வளவு தெரியுமா?

ஐபோன் 16 சீரீஸ் இந்திய சந்தையில் எப்போது கிடைக்கும்?

இந்த ஐபோன் வகைகள் உலக சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், விரைவில் இந்திய சந்தைகளிலும் விற்பனைக்கு வர உள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் நபர்கள் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் ப்ரீ புக் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!