iPhone 16 Series : வெளிநாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படும் ஐபோன் 16.. எவ்வளவு தெரியுமா? - Tamil News | Apple iPhone 16 series smartphones selling lower than India | TV9 Tamil

iPhone 16 Series : வெளிநாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படும் ஐபோன் 16.. எவ்வளவு தெரியுமா?

Published: 

25 Sep 2024 21:34 PM

Low Price | உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.

iPhone 16 Series : வெளிநாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படும் ஐபோன் 16.. எவ்வளவு தெரியுமா?

ஐபோன் 16 சீரீஸ்

Follow Us On

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் ப்ரீ புக்கிங் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கியது. இந்தியாவில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப விலை ரூ.79,900 ஆக உள்ள நிலையில், மற்ற நாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் எவ்வளவு விலை வித்தியாசத்தில் ஐபோன் விற்பனை செய்யப்படுகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இப்படி ஒரு பிரச்னையா?.. குழம்பும் பயனர்கள்!

இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் 16 சீரீஸ்

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ப்ரீ புக்கிங் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கியது. இந்த நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்டும் ஐபோன்களை விட மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வரிசையில் நிற்க தேவை இல்லை.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்!

இந்தியா Vs வெளிநாடு – ஐபோன் 16 சீரீஸ் விலை ஒப்பீடு

இந்தியா :

இந்தியாவில் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன் ரூ.79,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.80,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,34,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,59,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

அமெரிக்கா :

அமெரிக்காவில் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன் ரூ.67,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.75,049-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.83,397-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,00,093-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

கனடா :

கனடாவில் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன் ரூ.69,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.78,604-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.89,052-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,07,489-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

துபாய் :

துபாயில் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன் ரூ.79,-526க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.86,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.97,708-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,15,891-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

சிங்கபூர் :

துபாயில் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன் ரூ.83,978-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.90,443-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,03,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,22,767-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version