5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Apple iPhone : இதுவரை இல்லாத அளவு குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்கள்.. முழு விவரம் இதோ!

Lowest Price | இந்த பண வீக்கம் காரணமாக தான் சாம்சங்க் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் தங்களின் மொபைல் போன்களின் விலையை உயர்த்தியுள்ளன. மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுடன் நீங்கள் ஒப்பிட்டு பார்க்கையில், கடந்தன் 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலையில் சமீபத்தில் எந்த ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்காது.

Apple iPhone : இதுவரை இல்லாத அளவு குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்கள்.. முழு விவரம் இதோ!
ஐபோன் 16 (Photo Credit : Apple Website)
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Sep 2024 14:13 PM

ஆப்பிள் ஐபோன் : சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்களில் பல புதிய சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் விலை குறைவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குறைந்த விலைக்கு ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன, முந்தைய மாடல் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் ஐபோன் 16 சீரீஸ் எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : iPhone 16 Series : சந்தையில் அறிமுகமானது ஐபோன் 16 சீரீஸ்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் சந்தையில் அறிமுகமானது. கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியின் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஏர்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் மிக குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ,79,900-க்கு அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 16

தற்போது அறிமுகமாகியுள்ள ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் 128 ஜிபி கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட்போன் இந்தியாவி ரூ.79,900-க்கு அறிமுகமாகியுள்ளது. இதே விலையில் தான் ஐபோன் 12 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விலை குறைந்துள்ளது என்று கூறுவதற்கு இதற்கும் என்ன தொடர்பு கிருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆப்பிள் ஐபோன் 12 சீரீஸ் 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் 12 சீரீஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொருளாதார நிலையும் தற்போது இருக்கும் பொருளாதார நிலையும் முற்றிலும் மாறுபட்டது. காரணம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் 6% வரை பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த பண வீக்கம் இந்திய பொருளாதாரத்தில் பிரதிபளிக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக உயரும்.

இதையும் படிங்க : Apple Watch : அட்டகாசமான தோற்றம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ் .. முழு விவரம் இதோ!

4 ஆண்டுகள் கழித்தும் அதே விலையில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்

இந்த பண வீக்கம் காரணமாக தான் சாம்சங்க் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் தங்களின் மொபைல் போன்களின் விலையை உயர்த்தியுள்ளன. மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுடன் நீங்கள் ஒப்பிட்டு பார்க்கையில், கடந்தன் 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலையில் சமீபத்தில் எந்த ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்காது. இத்தகைய நடைமுறையை தான் மற்ற நிறுவனங்களும் கடைபிடிக்கின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இதில் இருந்து சற்று வேறுபட்டுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் விற்பனை செய்ததை விட குறைவான விலைக்கு மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

தரத்திள் எந்த சமரசமும் இல்லை

ஆப்பிள் நிறுவனம் குறைவான விலைக்கு மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது என்பதால் தரத்தில் ஏதேனும் சிக்கல் இருக்கும் என நினைக்க வேண்டாம். கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 12 சீரீஸ் வெறும் 46ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஐபோன் 16 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் போன்களை அப்கிரேட் செய்துள்ளது இதன் மூலம் தெளிவாகிறது.

இதையும் படிங்க : iPhone Price Drop : அதிரடியாக விலை குறைந்த ஐபோன் 14 மற்றும் 15.. ரூ.10,000 வரை தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஆப்பிள் ஐபோன் 16 என்ன விலைக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும்?

பண வீக்கம், புதிய அம்சங்கள் மற்றும் அப்கிரேட் ஆகியவற்றுக்காக ஆப்பிள் ஐபோன் 16 சுமார் ரூ.1,05,000 விலையில் அறிமுகம் செய்திருக்கப்பட வேண்டும். ஆனால் ஆப்பிள் நிறுவனம் வெறும் ரூ.79,900-க்கு மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் மொபைல் போன்களின் விலையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News