Apple Warning : நீங்களும் பாதிக்கப்படலாம்.. பயனர்களை எச்சரிக்கும் ஆப்பிள்.. ஏன் தெரியுமா?
Apple Warning | ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மெர்சினரி ஸ்பைவேர் அட்டாக் (Mercenary Spyware Attack) மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யபடலாம் என்று ஆப்பிள் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது எச்சரிக்கையாக உள்ளது.
பயனர்களை எச்சரிக்கும் ஆப்பிள் : உலக அளவில் அதிக அளவு மக்களுக்கு மிகவும் பிடித்த, அதிகம் பயன்படுத்தும் மொபைல் போன்களில் ஆப்பிள் போன்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆப்பிள் போன் மட்டுமன்றி லேப்டாப், டேப் என ஆப்பிள் நிறுவனத்தின் மின்சாதன பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதிகம் மதிப்பு உள்ளது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளில் உள்ள ஐ போன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெர்சினரி ஸ்பைவேர் அட்டாக் (Mercenary Spyware Attack) மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம் என்று ஆப்பிள் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது எச்சரிக்கையாக உள்ளது. இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிள் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதைய எச்சரிக்கையில் நீங்கள் மெர்சினரி ஸ்பைவேர் அட்டாக்கால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆப்பிள் தனது பயனர்களை எச்சரித்துள்ளது.
தனிநபர்களை குறிவைக்கும் Mercenary Spyware Attack
ஆப்பிள் வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை குறிப்பில், தனிநபர் அடையாள மற்றும் தொழில் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த சைபர் தாக்குதல் நடைபெறுவதாக கூறியுள்ளது. எனவே இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறும் ஆப்பிள் தனது பயனர்களுக்கு அறிவுறை வழங்கியுள்ளது. நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்பதை மையமாக கொண்டு உங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்படலாம். இதை யார் செய்கிறார்கள் என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பயனர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இதுவரை 150 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆப்பிள்
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் தனது பயனர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அதன்படி, இதுவரை 150 நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பயனர்களை ஆபத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நிறுவனம் எடுக்கும் முயற்சிகளை காட்டுகிறது.
இதையும் படிங்க : Cyber Crime : கிரெடிட் கார்டு மோசடிகளை தடுக்க இவற்றை ஃபாலோ பண்ணுங்க.. முழு விவரம் இதோ!
Mercenary Spyware Attack என்றால் என்ன?
இந்த மால்வேர் தாக்குதலை ஆப்பிள் Mercenary Spyware Attack என்று குறிப்பிடுகிறது. இந்த மால்வேர் தாக்குதலை குறித்து தனது பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் விரிவாக எச்சரிக்கை விடுத்துள்ளது. NSO குழுவால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்துவது போன்ற தாக்குதல்கள் வழக்கமான சைபர் குற்றங்களை விட மிகவும் நவீனமானது என்றும் ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : உங்கள் வாட்ஸ் அப் சாட் திருடப்படலாம்.. அதை தடுக்க இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!
அதுமட்டுமன்றி பயனர்கள் தங்கள் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.