Apple 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்.. லைவ் ஸ்ட்ரீமிங்கை பார்ப்பது எப்படி.. முழு விவரம் இதோ!
Its Glowtime | ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சி மூலம் ஐபோன் 16 சீரீஸ் மொபைல் போன்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளன. இதன் கீழ் 4 மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டடாலம் என கூறப்படுகிறது. அதாவது ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபொன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் : உலக அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சாதனைகளை செய்ய உள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியின் மூலம தனது பல்வேறு புதிய படைப்புகளை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுமட்டுமன்றி மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மொபைல் போன்களையும் ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சி மூலம் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்புகள் குறித்தும், ஆப்பிளின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சி குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : OnePlus : பச்சை கோடு முதல் மதர்போர்டு பிரச்னை வரை.. நீண்ட விளக்கமளித்த ஒன்பிளஸ் நிறுவனம்!
இன்று அறிமுகமாக உள்ள ஆப்பிளின் புதிய படைப்புகள் என்ன என்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சி மூலம் ஐபோன் 16 சீரீஸ் மொபைல் போன்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளன. இதன் கீழ் 4 மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டடாலம் என கூறப்படுகிறது. அதாவது ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபொன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த மொபைல் போன்களுடன் ஒரு புது வரவையும் ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 10 மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் எஸ்இ உள்ளிடவற்றை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : WhatsApp : உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமா.. அப்போ இத பண்ணுங்க!
ஆப்பிள் 16 சீரீஸ் விலை என்னவாக இருக்கும்?
தகவலின்படி ஆப்பிள் ஐபோன் 16 மாடல் ரூ.67,100-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதேபோல ஆப்பிள் ஐபோ ஐபோன் 16 பிளச் மாடல் ருூ.75,000-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 16 சீரீஸின் ப்ரோ மாடல்களை பொறுத்தவரை, அவை ரூ.90,000-க்கும் மேல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, ஐபோன் 16 ப்ரோ மாடல் ரூ.92,300-க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.1,00,700-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் இதுவரை 15 சீரீஸ்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த 16வது சீரீஸின் அறிமுகத்தை முன்னிட்டு தனது 15 சீரீஸ் மொபைல் போன்களின் விலையை அதிரடியாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Google Pixel : ரூ.23,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் விற்பனையாகும் Google Pixel 9 Pro Fold.. முழு விவரம் இதோ!
ஆப்பிள் நிறுவனத்தில் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வை பார்ப்பது எப்படி?
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் குபெர்டினோ பார்க்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி சரியா 10.30 மணிக்கு தொடங்கும் என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் ஆப்பிள் பயனர்கள்ந் நிகழவை காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி 3 வழிகளில் ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்சியை பார்க்க வழிவகை செய்கிறது. அதாவது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆப்பிள் யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி ஆப். இந்த 3 முறைகளை பயன்படுத்தி பொதுமக்கள் இந்த நிகழ்வை காணலாம்.