Scam : OLX-ல் QR கோடு மூலம் ரூ.2 லட்சத்தை பணத்தை இழந்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்! - Tamil News | Bengaluru man loses 2 lakh rupees in olx QR code scam | TV9 Tamil

Scam : OLX-ல் QR கோடு மூலம் ரூ.2 லட்சத்தை பணத்தை இழந்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

Published: 

03 Sep 2024 17:58 PM

OLX | பழைய பொருட்களை விற்பனை செய்யும் தளம் தான் ஓஎல்எக்ஸ். இதில் நீங்கள் பயன்படுத்திய பொருட்களை சிறந்த விலையில் விற்பனை செய்யலாம். அவ்வாறு நீங்கள் விற்பனை செய்ய தயாராக உள்ள பொருட்களின் விவரங்களுடன் கூடிய புகைப்படத்தை ஓஎல்எக்ஸ் தளத்தில் பதிவிட்டால் போதும். பின்பு உங்கள் பொருட்களை சிறந்த விலைக்கு வாங்க நினைப்பபரிடம் நீங்கள் விற்று பணம் பெற்றுக்கொள்ளலாம்.

Scam : OLX-ல் QR கோடு மூலம் ரூ.2 லட்சத்தை பணத்தை இழந்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம் (Surasak Suwanmake/Moment/Getty Images)

Follow Us On

சைபர் மோசடி : நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகில் நாளுக்கு நாள் சைபர் மோசடிகள் அரங்கேறிக்கொண்டே வருகின்றன. குறிப்பாக தகவல் திருட்டு மூலம் ஏராளமான குற்ற சம்பவங்களும், மோசடி சம்பவங்களும் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக கிரெடிட் மோசடிகளின் எண்ணிக்கை ஏராளம். நிதி சம்மந்தமான தகவல்களை பாதுகாப்பதற்காக ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டு இருந்தாலும் இந்த குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓஎல்எக்ஸ் கியூஆர் கோடு மோசடி மூலம் ரூ.2,00,000 பணத்தை இழந்துள்ளார். மோசடி நடைபெற்றது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Credit Card Scam : கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.72 லட்சத்தை இழந்த மூதாட்டி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஓஎல்எக்ஸ்

பழைய பொருட்களை விற்பனை செய்யும் தளம் தான் ஓஎல்எக்ஸ். இதில் நீங்கள் பயன்படுத்திய பொருட்களை சிறந்த விலையில் விற்பனை செய்யலாம். அவ்வாறு நீங்கள் விற்பனை செய்ய தயாராக உள்ள பொருட்களின் விவரங்களுடன் கூடிய புகைப்படத்தை ஓஎல்எக்ஸ் தளத்தில் பதிவிட்டால் போதும். பின்பு உங்கள் பொருட்களை சிறந்த விலைக்கு வாங்க நினைப்பபரிடம் நீங்கள் விற்று பணம் பெற்றுக்கொள்ளலாம். இது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள இணையதளம் ஆகும். ஏராளமான பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஓஎல்எக்ஸ் மூலம் அரங்கேறிய மோசடி

பெங்களூருவை சேர்ந்த சித்தார்த் என்ற இளைஞர், தன்னிடம் இருந்த ஏசி ஒன்றை ரூ.5,200-க்கு விற்பனை செய்ய தயாராக உள்ளதாக விளம்பரம் செய்துள்ளார். அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அவருக்கு போன் கால் வந்துள்ளது. அவரை தொடர்ப்புக்கொண்டு பேசிய நபர் தனது பெயர் ஸ்ரீகாந்த் வர்மா என்றும் தான் பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது தான் முதலில் பணம் செலுத்திவிடுவதாகவும் பிறகு பொருளை வாங்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Budget Smartphones : Vivo T3X முதல் Moto G64 வரை.. செப்டம்பர் மாதம் வாங்க கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனகள்.. அதுவும் வெறும் ரூ.15,000-க்குள்!

கொஞம் கொஞமாக பணத்தை கொள்ளையடித்த மோசடி நபர்

அப்போது அந்த நபர் ரூ.5-க்கான கியூ ஆர் கோடை சித்தார்த்-க்கு அனுப்பியுள்ளார். அதனை சித்தார்த் ஸ்கேன் செய்துள்ளார். அந்த நபர் சொன்னபடியே அவருக்கு ரூ.5 கிடைத்துள்ளது. இதேபோல அந்த நபர் ரூ.5,200-க்கான மற்றொரு QR கோடை அனுப்பியுள்ளார். அதனை ஸ்கேன் செய்தபோது தான் சித்தார்த்தின் தலையில் இடி இறங்கியுள்ளது. சித்தார்த் அந்த QR கோடை ஸ்கேன் செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.5,200 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த நபரிடம் கேட்டபோது தொழில்நுடப கோளாறு என்றும் தான் வேறு ஒரு QR கோடி அனுப்புவதாகவும் அதில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படியும் கூறியுள்ளார். இவ்வாறு அந்த நபர் அனுப்பிய QR கோடுகள் மூலம் சித்தார்த் தனது வங்கி கணக்கில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் பணத்தை இழந்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின்பு தனக்கு நடைபெற்ற மோசடியை உணர்ந்துக்கொண்ட சித்தார்த் அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டு சைபர் கிரைமில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version