WhatsApp : வாட்ஸ்அப்பில் தீபாவளி பரிசு மோசடி.. ரூ.4.5 லட்சம் பணத்தை இழந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
Bengaluru Man | பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதாவது அந்த இளைஞர் பணிபுரியும் நிறுவன மேலாளரிடம் இருந்து வருவது போல குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருந்ததை செய்ததால் அந்த இளைஞரின் ரூ.4.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே பரிசுகளுக்கும், தள்ளுபடிகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆனால், அதே அளவிற்கு மோசடிகளும் நடைபெறும். காரணம் தீபாவளி பண்டிகையின் போது பல நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்கும். பொதுமக்களும் அந்த நேரத்தை பயனபடுத்திக்கொண்டு மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்குவர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றன. அப்படிதான் பெங்களூருவை சேர்ந்த ஒரு இளைஞர் வாட்ஸ்அப்பில் வந்த தீபாவளி பரிசு செய்தியை நம்பி ரூ.4.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
இதையும் படிங்க : Budget Gifts : ரூ.10,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் பொருட்கள்.. தீபாவளிக்கு பரிசு கொடுக்க சிறந்த ஆப்ஷன்!
மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி
சமீப காலமாக மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துள்ளது. அதிலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் ஆதிக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க : JioBharat 4G : வெறும் ரூ.699-க்கு 4ஜி மொபைல் போன்.. அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட ஜியோ!
மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பயனுள்ளதாக உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். ஆனால், வாட்ஸ்அப் மூலம் அவ்வப்போது சில பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுகிறது. தவறான தகவல்களை பரப்புவது, சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்களும் வாட்ஸ்அப் செயலி மூலம் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் வந்த தீபாவளி பரிசு செய்தியை நம்பி இளைஞர் ஒருவர் சுமார் ரூ.4.5 லட்சம் ரூபாயை இழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க : iPhone 16 : ஆப்பிள் ஐபோன் 16-க்கு தடை விதித்த இந்தோனேசியா.. ஏன் தெரியுமா?
மோசடி சம்பவம் அரங்கேறியது எப்படி?
பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதாவது அந்த இளைஞர் பணிபுரியும் நிறுவன மேலாளரிடம் இருந்து வருவது போல குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், நான் தற்போது ஒரு மீட்டிங்கில் உள்ளேன். எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள நமது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு அளிக்க வேண்டும். அதனால் பேடிஎம்-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோர் கார்டுகள் கிடைக்கிறதா என்பதை சோதனை செய்து பாருங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : iPhone 15 Pro : ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி.. அசத்தல் சலுகையை வழங்கும் பிளிப்கார்ட்!
HR குழு மூலம் வெளியான உண்மை
தனது மேலாளரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததால் அந்த இளைஞரும் உடனடியாக சுமார் ரூ.4.5 லட்சம் ரூபாய்க்கு வவுச்சர்களை வாங்கியுள்ளார். அதுமட்டுமன்றி, அந்த வவுச்சர் கோடுகளை குறுஞ்செய்தி வந்த எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து HR குழுவிடம் தகவல் தெரிவிக்கும் போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அந்த இளைஞர் உணர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சிய்டைந்த அந்த இளைஞர் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் தொடர்புக்கொள்ள இனி மொபைல் எண் தேவையில்லை.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!
பண்டிகை காலங்களை பயன்படுத்தி மோசடி கும்பல்கள் இத்தகைய குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை மிகவும் பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.