5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BSNL : சபரிமலை பக்தர்களுக்கு இலவச Wi-Fi சேவை.. பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு!

Free Wi-Fi | சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இலவச Wi-Fi வழங்க உள்ளதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதாவது சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நிலக்கல், பம்பை சன்னிதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை இலவச வைஃபை வசதி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

BSNL : சபரிமலை பக்தர்களுக்கு இலவச Wi-Fi சேவை.. பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 13 Nov 2024 19:49 PM

அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு 30 நிமிடம் இலவச Wi-Fi வசதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக புதியதாக நெட்வொர்க் டவர்கள் அமைத்தது, சிம் கார்டு இல்லாமல் போன் பேசுவது என பல அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த இலவச Wi-Fi குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : BSNL : இனி சிம் கார்டு இல்லாமலே ஃபோன் பேசலாம்.. அடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பிஎஸ்என்எல்.. எப்படி தெரியுமா?

அதிரடியாக விலை ஏற்றம் செய்த நிறுவனங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட சில தனியார் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. ஜியோ நிறுவனம் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, தனது 5ஜி சேவையை பயன்படுத்துவதிலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஜியோவின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த பயனர்கள், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு தங்களின் மொபைல் எண்களை மாற்றத் தொடங்கினர். மிக குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் மொபைல் எண்களை, அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர் நிறுவனத்திற்கு மாற்ற விண்ணப்பித்தை அடுத்து ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

இதையும் படிங்க : BSNL : விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை.. களத்தில் இறங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.. முழு விவரம் இதோ!

போட்டியாக களத்தில் இறங்கிய பிஎஸ்என்எல்

அதன் காரணமாக ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழந்த தங்களது பயனர்களை மீட்கும் வகையில் பல புதிய சிறப்பு அம்சங்களையும், பிளான்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. இதேபோல அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல சிறப்பு முயற்சிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலைக்கு ரீச்சார்ஜ் திட்டம் வழங்குவது, குறைந்த விலைக்கு அதிக டேட்டா வழங்குவது, பயனர்களுக்கு புதிய சேவைகளை வழங்குவது என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பயணர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் டேட்டா மிஸ் ஆகாமல் Transfer செய்வது எப்படி.. வழிமுறைகள் இதோ!

சபரிமலையில் இலவச Wi-Fi சேவை

இந்த நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இலவச Wi-Fi வழங்க உள்ளதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதாவது சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நிலக்கல், பம்பை சன்னிதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை இலவச வைஃபை வசதி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வைஃபை ஹாட்ஸ்பாட்டைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பக்தர்களை பிஎஸ்என்எல் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்க முடியும் என்பதால் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இலவச வைஃபை சேவையை பயன்படுத்த நினைக்கும் பட்சத்தில் அவர்களின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபியை உள்ளிட்ட பிறகு வைஃபை சேவையை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க : Budget Smartphone : நவம்பர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

பக்தர்கள் பயன்பெறும் வகையில் பம்பையில் 13, நிலக்கல்லில் 13 மற்றும் சன்னிதானத்தில் 22 ஹாட்ஸ்பாட்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச வைஃபை சேவை குறித்து மேலும் தகவல்களை தெரிந்துக்கொள்ள 9400901010 என்ற மொபைல் எண் அல்லது 8004444 அல்லது bnslebpta@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News