BSNL : 150 நாட்கள் வேலிடிட்டி.. வெறும் ரூ.397-க்கு அறிமுகம்.. அசத்தும் பிஎஸ்என்எல்! - Tamil News | BSNL introduced new recharge plan for just 397 rupees with 150 days validity | TV9 Tamil

BSNL : 150 நாட்கள் வேலிடிட்டி.. வெறும் ரூ.397-க்கு அறிமுகம்.. அசத்தும் பிஎஸ்என்எல்!

New Recharge Plan | கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மட்டும் போஸ்ட் பெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை பயன்படுத்துவதிலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பயனர்கள் அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தங்கள் மொபைல் எண்களை மாற்றத் தொடங்கினர்.

BSNL : 150 நாட்கள் வேலிடிட்டி.. வெறும் ரூ.397-க்கு அறிமுகம்.. அசத்தும் பிஎஸ்என்எல்!

மாதிரி புகைப்படம்

Published: 

05 Nov 2024 19:12 PM

அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில நாட்களாக முக்கிய அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் களக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : OnePlus 13 : சீனாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் 13.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?.. முழு விவரம் இதோ!

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புக்கு மாற விண்ணப்பித்த பயனர்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மட்டும் போஸ்ட் பெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை பயன்படுத்துவதிலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பயனர்கள் அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தங்கள் மொபைல் எண்களை மாற்றத் தொடங்கினர். அதாவது, குறைந்த நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் மொபைல் எண்களை பிஎஸ்என்எல் தொலைத்தொடர் நிறுவனத்திற்கு மாற்ற விண்ணப்பித்தை அடுத்து ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

இதையும் படிங்க : UPI : நெட்வொர்க் இல்லாமல் UPI-ல் பணம் அனுப்பலாம்.. முழு விவரம் இதோ!

சிறப்பு அம்சங்கள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்

இந்த நிலையில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இழந்த தங்களது பயனர்களை மீட்கும் விதமாக பல புதிய சிறப்பு அம்சங்களையும் சிறப்பு பிளான்களையும் வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையே அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, குறைந்த விலைக்கு ரீச்சார்ஜ் திட்டம் வழங்குவது, குறைந்த விலைக்கு அதிக டேட்டா வழங்குவது என பல அதிரடி சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பயணர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட ஒரு அசத்தல் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் இனி எதுவுமே மிஸ் ஆகாது.. விரைவில் புதிய அம்சத்தை அறிமுகம்!

பிஎஸ்என்எல் புதிய திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.397-க்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 150 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, தினசரி 2ஜிபி டேட்டே, அன்லிமிடெட் போன் கால் மற்றும் தினமும் 100 இலவச குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மற்ற நிறுவனங்களின் 30 நாட்களுக்கான ரீச்சார்ஜ் திட்டமே ரூ.300-க்கு விற்பனை செய்யபப்டும் நிலையில், 150 நாட்களுக்கான திட்டத்தை பிஎஸ்என்எல் வெறும் ரூ.397-க்கு அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Instagram Reels : இன்ஸ்டாகிராமில் ஆடியோ உடன் ரீல்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

50,000 நெட்வொர்க் டவர்களை நிறுவிய பிஎஸ்என்எல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000 புதிய நெட்வொர்க் டவர்களை நிறுவியது. அதாவது இணைய வசதி இல்லாத குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் டவர்கள் இல்லாத பல பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் டவரை நிறுவியுள்ளது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின்  பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்த எளிய வழிகள் இதோ!
இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையங்கள் எவை தெரியுமா?
புகைப்படங்களை சோதிக்க வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் - விரைவில் அறிமுகம்!
அவரைப் போல இருக்க வேண்டும் - நடிகை பார்வதியின் ஆசை