BSNL Rechage Plan: வேற லெவல்.. ரீசார்ஜ் கட்டணத்தை குறைந்த பி.எஸ்.என்.எல்.. மாத ப்ளான் கட்டணம் இதுதான்! – Tamil News (தமிழ் செய்தி): Breaking Tamil Samachar, and Latest Tamil News Live | TV9 Tamil

BSNL Rechage Plan: வேற லெவல்.. ரீசார்ஜ் கட்டணத்தை குறைந்த பி.எஸ்.என்.எல்.. மாத ப்ளான் கட்டணம் இதுதான்!

Updated On: 

02 Jul 2024 12:01 PM

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களே மேற்கொள்கின்றன. சமீபத்தில் நாட்டில் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதோடு இல்லாமல் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களும் சுமார் 26 சதவீதம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ள நிலையில், அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி அளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்துள்ளது.

BSNL Rechage Plan: வேற லெவல்.. ரீசார்ஜ் கட்டணத்தை குறைந்த பி.எஸ்.என்.எல்.. மாத ப்ளான் கட்டணம் இதுதான்!

பி.எஸ்.என்.எல்

Follow Us On

ரீசார்ஜ் கட்டணத்தை குறைந்த பிஎஸ்என்எஸ்: நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களே மேற்கொள்கின்றன. சமீபத்தில் நாட்டில் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதோடு இல்லாமல் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களும் சுமார் 26 சதவீதம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. ஜூலை 3ஆம் தேதி ஜியோ, ஏர்டெல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஜூலை 4ஆம் தேதி வோடபோன் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ள நிலையில், அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி அளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்துள்ளது.

நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிக்கமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது பிஎஸ்என்எல். அதாவது, 249 ரூபாய்க்கான சூப்பரான திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 45 நாட்கள் வரை இருக்கும். ஒரு நாளைக்கு 2 ஜிபி நெட், ஒரு நாளைக்கு 100 இலவச மெசேஜ், இலவச கால்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், பிஎஸ்என்எல் புதிய யுக்தியாக கட்டணத்தை குறைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிஎன்எல்க்கு மாற வாய்ப்புள்ளது.

Also Read: வாட்ஸ் அப் யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி இந்த ஆப்ஷன் ஈஸி!

எது சிறந்தது?

ஏர்டலில் 249 ரூபாய் திட்டம் 28 நாட்களுக்கு இருக்கும். ஒரு நாளைக்கு 1GB டேட்டா மட்டும் தான் இருக்கும். அதேபோல, ஜியோவில் 249 ரூபாய் திட்டம் 28 நாட்களுக்கு இருக்கும். ஒரு நாளைக்கு 1.5GB இருக்கும். எனவே, ஏர்டெல், ஜியோவுடன் ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் அறிமுகமான திட்டம் 17 நாட்கள் கூடுதல் சேவைவை வழங்குகிறது. மேலும், தினசரி டேட்டா 2GB வழங்கப்படுகிறது.

ரீசார்ஜ் ப்ளான்:

  • 2GB Data 28 நாட்களுக்கு ரூ.189 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.155 ஆக இருந்தது.
    நாள் ஒன்றுக்கு 1GB Data 28 நாட்களுக்கு ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.209 ஆக இருந்தது.
  • நாள் ஒன்றுக்கு 1.5GB Data 28 நாட்களுக்கு ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.239 ஆக இருந்தது.
  • நாள் ஒன்றுக்கு 2GB Data 28 நாட்களுக்கு ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.299 ஆக இருந்தது.
  • நாள் ஒன்றுக்கு 2.5GB Data 28 நாட்களுக்கு ரூ.399 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.349 ஆக இருந்தது.
  • நாள் ஒன்றுக்கு 3GB Data 28 நாட்களுக்கு ரூ.449 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.399 ஆக இருந்தது.
  • நாள் ஒன்றுக்கு 1.5GB Data 56 நாட்களுக்கு ரூ.579 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.479 ஆக இருந்தது.
  • நாள் ஒன்றுக்கு 2GB Data 56 நாட்களுக்கு ரூ.629 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.533 ஆக இருந்தது.
  • 6GB Data 84 நாட்களுக்கு ரூ.479 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.395 ஆக இருந்தது.
  • நாள் ஒன்றுக்கு 1.5GB Data 84 நாட்களுக்கு ரூ.799 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.666 ஆக இருந்தது.

Also Read: அதிரடியாக உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Exit mobile version