5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BSNL : இனி பக்கா நெட்வொர்க்… பிஎஸ்என்எல் சொன்ன குட்நியூஸ்.. என்ன தெரியுமா?

Network | கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

BSNL : இனி பக்கா நெட்வொர்க்… பிஎஸ்என்எல் சொன்ன குட்நியூஸ்.. என்ன தெரியுமா?
கோப்பு புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 18 Oct 2024 16:13 PM

தற்போதைய நவீன உலகத்தில் என்னதான் இணைய வசதிகள் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும், அவ்வப்போது இணைய சேவைகளில் கோளாறு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக இணைய சேவை தடைபடுவது, குறைந்த வேகத்தில் இணைய சேவை கிடைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமாக BSNL ஒரு சிறப்பு முயற்சியை கையில் எடுத்துள்ளது. Viasat நிறுவனத்துடன் இணைந்து BSNL மேற்கொண்ட சோதனை முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து, விரைவில் இந்த சேவை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Meta : கோடிகளில் சம்பளம்.. சாப்பாடு டோக்கனில் ஏமாற்று வேலை.. பணி நீக்கம் செய்த மெட்டா!

ப்ரீ பெய்டு பிளான்களின் விலையை உயர்த்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பயனர்களை இது கோபமூட்டும் விதமாக அமைந்தது.

இதையும் படிங்க : Apple iPhone 13 : ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்!

அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்யும் BSNL

இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். அதன்படி சாரை சாரையாக மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர்.இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான பல சலுகைகளுடன் கூடிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தொடங்கின. ஆனால் அவற்றை எல்லாம் விட ஒரு படி மேலே சென்று மிக குறைந்த விலையில் பிளான்களை அறிமுகம் செய்தது BSNL. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு அட்டகாசமாக சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. BSNL இந்த திட்டத்தை அறிமுகம் செய்யும்பட்சத்தில், அதன் பயனர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : Moto G85 : மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி.. பிளிப்கார்டின் அசத்தல் சலுகை!

செயற்கைக்கோளில் இருந்து நேரடி இணைய வசதி

BSNL  நிறுவனம் தகவல் தொடர்பு நிறுவனமான Viasat உடன் இணைந்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. அதாவது, செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு இணைய சேவையை வழங்கும் அம்சம் தான் இது. இந்த சிறப்பு சேவையை நிறைவேற்ற Viasat உடன் BSNL இணைந்து நடத்திய சோதனை வெற்றிபெற்றதை அடுத்து, விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, இந்தியாவிலே முதல் முறையாக செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக இணைய சேவையை BSNL வழங்க உள்ளது.

இதையும் படிங்க : Instagram : “Profile Card” அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

சோதனையில் வெற்றி

இந்த சோதனையில் நிலப்பரப்பு அல்லாத இணைய சேவையை கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி இரு வழி செய்தி அனுப்புதல் மற்றும் SoS செய்தி அனுப்புதல் ஆகியவற்றை சோதனை செய்தது. Viasat-ன் ஜியோஸ்டேஷ்னரி எல்-பேண்ட் செயற்கைக்கோள்களில் ஒன்றிற்கு சுமார் 36,000 கிலோ மீட்டர்கள் தொலைவில் செய்திகள் அனுப்பப்பட்டன. இதன் மூலம் செயற்கைக்கோள்களில் இருந்து நேரடியாக இணைய சேவை வழங்க முடியும் என்பது உறுதியாகி உள்ளதாக Viasat நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Social Media Account : ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது சமூக வலைதள கணக்குகள் என்ன ஆகும் தெரியுமா?

BSNL மற்றும் Viasat-ன் இந்த முன்னெடுப்பு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் பட்சத்தில், தடையின்றி இணைய சேவைகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News