BSNL Offer : ரூ.58க்கு டெய்லி 2ஜி டேட்டா.. பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்!
BSNL Prepaid Plan: பி.எஸ்.என்.எல் ரூ.58 ரீசார்ஜ் திட்டமானது 7 நாள்கள் வேலிடிட்டி மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.
பி.எஸ்.என்.எல் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.
பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் 4ஜியை அறிமுகப்படுத்துவதில் சிரமப்பட்டு வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவும், அதன் நெட்வொர்க்கை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவும் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களைக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த இரண்டு புதிய திட்டங்களின் கட்டணம் ரூ.58 மற்றும் ரூ.59 ஆகும். ரூ.58க்கான திட்டம் டேட்டா வவுச்சராகும். ரூ.59 திட்டம் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
ரூ 58 ப்ரீபெய்ட் திட்டம்
பி.எஸ்.என்.எல் -ன் ரூ.58 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு டேட்டா வவுச்சராகும். இதன் பலன்களைப் பயன்படுத்த பயனர் ஏற்கனவே ஆக்டிவில் உள்ள திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.
ரூ.58 திட்டமானது 7 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. எஃப்.யு.பி (fair usage policy) தரவைப் பயன்படுத்திய பிறகு, வேகம் 40 கேபிபிஎஸ் ஆகக் குறைகிறது.
ரூ 59 ப்ரீபெய்ட் திட்டம்
பி.எஸ்.என்.எல் -ன் ரூ.59 ப்ரீபெய்ட் திட்டம் 7 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற காலிங் வசதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் இல்லை.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு ரூ. 8.43 ஆகும். இது மிகவும் அதிகம். நீண்ட காலச் சேவைகளுக்கு செலவிட முடிந்தால், தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடமிருந்து சிறந்த மதிப்புள்ள திட்டங்களைப் பெறலாம்.
இந்தத் திட்டங்கள், அவர்களின் இரண்டாம் நிலை பி.எஸ்.என்.எல் சிம்மை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நியாயமான விலையில் பயன்படுத்தவும் உதவும்.
பி.எஸ்.என்.எல் சராசரி வருவாயில் (ARPU) பெரிய உயர்வைக் பெறாது. ஆனால், இவற்றின் காரணமாக இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு இப்போது சில சந்தாதாரர்களின் சந்தைப் பங்கைக் கட்டுப்படுத்தவும் வருவாயை மேம்படுத்தவும் 4ஜி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விரல் நுனியில் எலக்ட்ரானிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்: கூகுளில் புதிய வசதி!