BSNL : பிஎஸ்என்எல் கொடுக்கும் சூப்பர் ரீசார்ஜ்.. ரூ.49க்கு ஓடிடி தளங்கள்.. முழு விவரம் இதோ! - Tamil News | BSNL provide OTT platforms at just rupees 49 recharge plans | TV9 Tamil

BSNL : பிஎஸ்என்எல் கொடுக்கும் சூப்பர் ரீசார்ஜ்.. ரூ.49க்கு ஓடிடி தளங்கள்.. முழு விவரம் இதோ!

Updated On: 

20 Jul 2024 15:47 PM

BSNL Recharge plan benefits | சமீபத்திய ஆய்வின் படி பெரும்பாலான மக்கள் தங்கம் மொபைல் எண்ணை பிற நொட்வொர்குகளில் கிருந்து BSNL-க்கு மாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில், BSNL அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி தளங்களை பயன்படுத்துவதற்கான சலுகைகளையும் வழங்குகிறது. 

BSNL : பிஎஸ்என்எல் கொடுக்கும் சூப்பர் ரீசார்ஜ்.. ரூ.49க்கு ஓடிடி தளங்கள்.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Follow Us On

BSNL-ன் புதிய பிளான் : சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ப்ரீ பெய்டு மற்றும் போஸ் பெய்ட் பிளான்களில் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை BSNL மற்றும் ஏர்டெல்லுக்கு மாற்றம் செய்து வருகின்றனர். சமீபத்திய ஆய்வின் படி பெரும்பாலான மக்கள் தங்கம் மொபைல் எண்ணை பிற நொட்வொர்குகளில் கிருந்து BSNL-க்கு மாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில், BSNL அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி தளங்களை பயன்படுத்துவதற்கான சலுகைகளையும் வழங்குகிறது.

ZEE5, SonyLIV, YuppTV, Disney + Hotstar, Hungama உள்ளிட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்களை ஒரே பிளானில் வழங்க BSNL திட்டமிட்டுள்ளது. பிளான்களுக்கு ஏற்ப ஒடிடி பிளாட்ஃபார்ம்களை தேர்வு செய்யும் வசதியையும் BSNL வழங்குகிறது. இந்த ரீச்சார்ஜ் பிளான்கள் ரூ.49 முதல் ரூ.250 வரை வழங்கபப்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டத்திற்கு,  BSNL  சினிமா பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

BSNL சினிமா பிளஸ்-ன் சிறப்பு அம்சங்கள் என்ன?

  • இது ஒரே பிளானில் பல்வேறு ஓடிடி தளங்களுக்கு Subscribtion வழங்குகிறது.
  • இந்த சலுகைகளை பயனர்கள் எந்த நேரம் வேண்டுமாலானும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட எந்த சாதனங்களில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இந்த பிளான் மூலம் ZEE5, SonyLIV, YuppTV, Disney + Hotstar, Hungama  உள்ளிட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்களை பார்க்கலாம்.

இதையும் படிங்க : 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் சிறை தண்டனை.. ரூ.2,00,000 அபராதம்.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

BSNL சினிமா பிளஸ் குறித்த கூடுதல் விவரங்கள்

ரூ.49-க்கான BSNL சினிமா பிளஸ் பிளான் 

  • இத பிளானின் விலை ரூ.49 ஆகும்.
  • இதில் Shemaroo, Hungama, Lionsgate and EPIC ஓடிடி தளங்களை பார்க்கலாம்.

ரூ.119-க்கான BSNL சினிமா பிளஸ் பிளான் 

  • இந்த பிளானின் விலை ரூ.119 ஆகும்.
  • இதில் ZEE5 Premium, SonyLIV Premium, YuppTV மற்றும் Disney+Hotsar ஓடிடி தளங்களை பார்க்கலாம்.

ரூ.249-க்கான BSNL சினிமா பிளஸ் பிளான் 

  • இந்த பிளானின் விலை ரூ.249 ஆகும்.
  • இதில் ZEE5 Premium, SonyLIV Premium, YuppTV, Shemaroo, Hungama மற்றும் Disney+Hotsar உள்ளிட்ட ஓடிடி தளங்களை பார்க்கலாம்.

இதையும் படிங்க : Microsoft Windows : விண்டோஸ் திடீர்னு ஏன் முடங்கியது? காரணம் இதுதான்!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்வு நிறுவனங்கள் விலையேற்றியதன் அதிர்ச்சியில் உள்ள மக்களை BSNL-ன் இந்த புதிய பிளான் நிம்மதியடைய செய்துள்ளது. ஏற்கனவே ஏராளமான பயனர்கள் BSNL நோக்கி படையெடுக்கும் நிலையில், இந்த புதிய மாற்றம் காரணமாக பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version