BSNL Recharge Plan: 18 ரூபாய் இருந்தாலே போதும்… பிஎஸ்என்எல் வழங்கும் சூப்பரான ரீசார்ஜ் பிளான்.. மிஸ் பண்ணாதீங்க!
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது.
பி.எஸ்.என்.எல்: சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பயனர்களை இது கோபமூட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். அதன்படி சாரை சாரையாக மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர். இந்த சமையத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த BSNL, பயனர்களுக்கு சலுகைகளை வாரி வழங்க தொடங்கி விட்டது. ஏராளமானோர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வரும் நிலையில், 18 ரூபாயில் இருந்தே நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளும் திட்டங்கள் இருக்கின்றன. அது என்னென் என்பதை பார்ப்போம்.
Also Read: இனி இந்த மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய அறிவிப்பு!
பிஎஸ்என்எல் ரூ.18 திட்டம்:
பிஎஸ்என்எல் மிக குறைந்த நிலையில் 18 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதற்கு 2 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் காலும் வழங்கப்படுகிறது. இந்த டேட்டா லிமிட் முடிந்ததும் பயனர்கள் 80kbs-க்கும் குறைவான வேகத்தில் அன்லிமிட்டட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரூ.87 ரீசார்ஜ் திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கட்டணமே இல்லாமல் எவ்வளவு நேரம், எத்தனை அழைப்புகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ரூ.99 ரீசார்ஜ் திட்டம் 18 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் கட்டணமே இல்லாமல் எவ்வளவு நேரம், எத்தனை அழைப்புகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
Also Read: இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவது எப்படி.. முழு விவரம் இதோ!
ரூ.118 ரீசார்ஜ் திட்டம் 20 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கட்டணமே இல்லாமல் எவ்வளவு நேரம், எத்தனை அழைப்புகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ரூ.147 ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாதம் முழுவதும் மொத்தமாக 10 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வரை செய்து கொள்ளவும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எத்தனை அழைப்புகளும் செய்து கொள்ளலாம்.