BSNL : விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை.. களத்தில் இறங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.. முழு விவரம் இதோ!

5G Network | கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை பயன்படுத்துவதிலும் பயனர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.  இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பயனர்கள், அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு தங்கள் மொபைல் எண்களை மாற்றத் தொடங்கினர்.

BSNL : விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை.. களத்தில் இறங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

07 Nov 2024 19:13 PM

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பின் பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் களக்கத்தில் உள்ள நிலையில், பிஎஸ்என்எல் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள களத்தில் இறங்கியுள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவை வழங்குவதற்காக பணியில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க : Amazon : 5 நாட்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும்.. இல்லையென்றால்.. ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட அமேசான்!

பிளான்களின் விலையை உயர்த்திய நிறுவனங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை பயன்படுத்துவதிலும் பயனர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.  இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பயனர்கள், அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு தங்கள் மொபைல் எண்களை மாற்றத் தொடங்கினர். குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் மொபைல் எண்களை பிஎஸ்என்எல் தொலைத்தொடர் நிறுவனத்திற்கு மாற்ற விண்ணப்பித்தை அடுத்து ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

அதிரடியாக உயர்ந்த பிஎஸ்என்எல் பயனர்களின் எண்ணிக்கை

இந்த நிலையில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழந்த தங்களது பயனர்களை மீட்கும் வகையில் பல புதிய சிறப்பு அம்சங்களையும், பிளான்களையும் வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையே அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல சிறப்பு முயற்சிகள் மற்றும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, குறைந்த விலைக்கு ரீச்சார்ஜ் திட்டம் வழங்குவது, குறைந்த விலைக்கு அதிக டேட்டா வழங்குவது என பல அதிரடி சலுகைகள், சேவைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பயணர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : Online Scam : வாட்ஸ்அப் குழுவால் வந்த ஆபத்து.. ரூ.50 லட்சம் பணத்தை இழந்த முதியவர்.. அதிர்ச்சி சம்பவம்!

புதியதாக 50,000 டவர்களை நிறுவிய பிஎஸ்என்எல்

இவ்வாறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலை ஏற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனம், தனது சேவைகளை நிலைநாட்டும் வகையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் சுமார் 50,000 நெட்வொர்க் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவியுள்ளது. குறிப்பாக, நெட்வொர்க் வசதி இல்லாத பகுதிகள் மற்றும் கிராமங்களில் தனது 4ஜி டவர்களை நிறுவியிள்ளது. புதிய பயனர்களை ஈர்க்கும் புதிய யுக்தியாக பிஎஸ்என்எல் நிறுவனம் இதை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே சுமார் 50,000 டவர்களை நிறுவியுள்ள நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டு பாதிக்குள் சுமார் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, அதன் பயனர்களை விரிவடைய செய்யும் விதமாக அமைந்துள்ளது. இதனால் இந்தியாவின் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கவலையில் உள்ளன.

இதையும் படிங்க : RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

முதற்கட்டமாக சுமார் 1,876 இடங்களில் 5ஜி நெட்வொர்க் டவர்கள்

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. அதாவது விரைவில் 5ஜி நெட்வொர்க் டவர்களை அறிமுகம் செய்யும் பணியில் பிஎஸ்என்எல் இறங்கியுள்ளது. அதாவது நாட்டில் சுமார் 1,876 இடங்களில் 5ஜி நெட்வொர்க் டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டரை வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியிட உள்ளதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பணிகளுக்காக முதற்கட்டமாக சுமார் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!