5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வரிசையில் நிற்க தேவை இல்லை.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்!

Online Delivery | உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.

iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வரிசையில் நிற்க தேவை இல்லை.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்!
ஆப்பிள் 16 ஸ்மார்ட்போன்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 23 Sep 2024 14:38 PM

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுக செய்த நிலையில், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனை தொடங்கியது முதலே ஐபோன் ஷோ ரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஐபோன் விற்பனை தொடங்கிய முதல் நாள், சாலை வரை மக்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், வரிசையை தவிர்த்து சுலபமாக ஐபோன்களை வாங்க இந்த டெலிவரி நிறுவனங்கள் உதவி செய்கின்றன. அவை எந்த எந்த நிறுவனங்கள், எவ்வளவு நேரத்தில் ஐபோன் டெலிவரி செய்யபப்டுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Chess Olympiad 2024: ஒரே நாளில் மூன்று தங்கம்.. செஸ் ஒலிம்பியாட்டில் சாம்பியன் பட்டத்தை அள்ளிய இந்தியா!

இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சியில் அறிமுக செய்யப்பட்ட ஆப்பிள் 16 சீரீஸ்

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ப்ரீ புக்கிங் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கியது.

இதையும் படிங்க : IPL 2025 Retention: தோனிக்காக முக்கிய வீரர்களை வெளியேற்ற திட்டமா? பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் சிஎஸ்கே!

ஆப்பிள் ஷோ ரூம்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

ஆப்பிள் ஐபோன் விற்பனை தொடங்கியது முதலே, அனைத்து ஆப்பிள் ஷோ ரூம்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஷோ ரூம் முதல் சாலை வரை மக்கள் வரிசை நிற்கிறது. இந்த சூழலில் ஷோ ரூம்களுக்கு சென்று ஐபோன் வாங்க வேண்டும் என நினைத்தால் அது சற்று சவாலானதாக தான் இருக்கும். காரணம் ஐபோன்களை வாங்க நீங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். இந்த கவலைகளை போக்கும் விதமாக தான் டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குறிப்பிட்ட டெலிவரி நிறுவனங்கள் மூலம் நீங்கள் ஐபோன் 16 ஆர்டர் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வெறும் 20 நிமிடங்களில் உங்கள் கைகளில் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Srilanka President Election: இலங்கையில் புதிய சகாப்தம்.. அதிபராக பதவியேற்கும் இடதுசாரி தலைவர் அனுரகுமார திசாநாயக..!

ஐபோன்களை 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்

ஐபோன் ஷோ ரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மொபைல் போன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், BigBasket, Blinkit, Zepto உள்ளிட்ட டெலிவரி நிறுவனங்கள் வெறும் 20 நிமிடங்களில் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை விரைவாக டெலிவரி செய்வதற்கு பெயர் போனது BigBasket நிறுவனம். இந்த நிலையில், ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை மிக விரைவாக டெலிவரி செய்து கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : Tamil Nadu Weather Update: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..

வெறும் 7 நிமிடங்களில் ஐபோன் டெலிவரி செய்த BigBasket

BigBasket நிறுவனம் ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு வெறும் 7 நிமிடங்களில் டெலிவரி செய்துள்ளது. இது குறித்து பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், நான் காலை 8 மணிக்கு ஐபோன் 16 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்தேன். சரியாக காலை 08.07 மணிக்கு ஐபோன் டெலிவரி செய்யப்பட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Latest News